
பனங்கிழங்கு புட்டு
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு நறுக்கியது -ஒரு கப்
சீரகம் - ஒரு ஸ்பூன் பூண்டு பல் - 3
காய்ந்த மிளகாய் - 3
தேவையான அளவு - உப்பு .
செய்முறை:
பனங்கிழங்கை நார்மீகி சிறு துண்டுகளாக நடித்துக்கொள்ள வேண்டும் மிளகாய் பூண்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். அரைத்ததை எடுத்து தட்டில் வைத்து சாப்பிடலாம் சுவையான பனங்கிழங்கு காரப்புட்டு ரெடி. இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
பனங்கிழங்கு பாயசம்
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 6 வெல்லம் - 1 1/2 கப்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பால் - 1 கப்
முந்திரி - 5
நெய் -3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
செய்முறை:
முதலில் பனங்கிழங்கை தோல் சீவி முத்தம் பண்ணி சிறு சிறு துண்டு வழங்க நடக்கவும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி வைக்கவும்.
ஊற வைக்க பச்சரிசி தேங்காய் துருவலை சேர்த்து நைசாக அரைக்கவும். உடைத்து வைத்த வெள்ளத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு பால் காய்ச்சி வைக்கவும்.
பச்சரிசி தேங்காய் பால் அரைத்து வைத்த கலவையை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கிளறி வேகவைக்கவும். அதில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு கிளறவேண்டும். பசைபோல் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். வெந்து வரும்போது அரைத்து வடிகட்டிய பனங்கிழங்கு சாறை ஊற்றி கலக்கவேண்டும். அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறி, ஏலக்காயை தட்டிப்போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான அட்டகாசமான பனங்கிழங்கு பாயசம் தயார்.
பனங்கிழங்கு லட்டு.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த பனங்கிழங்கு - 6
துருவிய தேங்காய் - அரை கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் - 2
செய்முறை:
பனங்கிழங்கை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குளிர்சாதன பெட்டியில் அரைமணி நேரம் வைத்து எடுத்து ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கவும். பிறகு தேங்காய் துருவல் சர்க்கரை பொடியுடன் சேர்த்து நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும். சுவையான பனங்கிழங்கு லட்டு ரெடி. செய்து பார்த்து ருசி எப்படி என கூறுங்கள்.