சூடான சோறுக்கு சூப்பரான துவையல் செய்யலாமா… துவையல்!

Can we make a super thuvaiyal for hot rice
healthy thuvayal recipes
Published on

ல்ல பசி நேரத்தில் தட்டில் சூடான சோறு போட்டு அதில் சுருக்குனு ருசியான துவையல் போட்டு சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். வாங்க.. இங்கு சில துவையல் வகைகளை காண்போம்.

கருவேப்பிலை துவையல்
தேவை:

கருவேப்பிலை - 3 கைப்பிடி அல்லது 200 கிராம்
தனியா விதை-  1 டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பு-  1டேபிள் ஸ்பூன்
புளி -நெல்லி அளவு
வர மிளகாய் - 5
பூண்டு - 4 பல்
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
கருவேப்பிலையை காம்பு நீக்கி ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு வதக்கவும் . அதை தனியே வைத்துவிட்டு அதே வாணலியில் உளுத்தம்பருப்பு மல்லி வாசம் வரும் வரை சிறிது எண்ணெயில் வறுத்து கடைசியாக மிளகாய் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் பூண்டு, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும். விரும்பினால் தாளிக்கலாம்.

இஞ்சி துவையல்
தேவை:

இஞ்சி-  25 கிராம்
பச்சை மிளகாய் -  4
பூண்டு - 10 பற்கள்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை -தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் -4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளைப்பூண்டு உரித்து வைக்கவும். சூடான கடாயில் ஊற்றிக் காய்ந்த சிறிது நல்லெண்ணெயில் உளுத்தம் பருப்பு வறுத்து தேங்காய் துருவல், இஞ்சி, கருவேப்பிலை போட்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கி ஆறியதும்  தேவையான புளி உப்பு சேர்த்து அரைக்கவும். மீதி எண்ணெயில் கடுகு போட்டு தாளித்து அரைத்த விழுதுடன் சிறிது நீர் சேர்த்து கிளறி பச்சை வாசனை போகும்வரை கிண்டவும். சுவையான இஞ்சித் துவையல் ரெடி. 

இதையும் படியுங்கள்:
வெஜிடபிள் இட்லியும், இலை இனிப்பு அடையும்!
Can we make a super thuvaiyal for hot rice

புதினா துவையல்
தேவை:

புதினா - 1 கட்டு
தேங்காய்-  1கப்
பச்சை மிளகாய்-  4
எலுமிச்சம் பழம் - அரை மூடி
உப்பு –தேவைக்கு

செய்முறை:
புதினா இலையை ஆய்ந்து எடுத்து அலசி மிளகாய், தேங்காய், உப்புடன் எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்து முடிக்கும்போது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் .இதை தாளிக்காமல் ரொட்டி மற்றும் சப்பாத்திக்கு அப்படியே வைத்து சாப்பிட்டாலும்  நன்றாக இருக்கும்.

மாங்காய் துவையல்
தேவை:

புளிப்பான கிளி மூக்கு மாங்காய் - 1/2 சதைப்பகுதி
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - தேவைக்கு
கடலை பருப்பு உளுத்தம் பருப்பு - தலா 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய்-  4
பச்சை மிளகாய் -  2
பெருங்காயத்தூள் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
வெற்றிலை பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
Can we make a super thuvaiyal for hot rice

செய்முறை:
அடுப்பை மிதமான தீயில் வைத்து அதில் அடிகனமான கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் துருவிய மாங்காய், தேங்காய் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதை அப்படியே ஆறவிடவும். மீண்டும்  அதே கடாயில் கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கருகாமல் சிவக்க வறுத்து ஆறவிடவும். மிக்ஸியில் முதலில் வதக்கிய மாங்காய்  போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.

பிறகு வறுத்த பருப்பை சேர்த்து ஒரு கற்று சுற்றி சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கால் டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து அதில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். சுவையான வித்தியாசமான மாங்காய் துவையல் சூடான சோற்றுக்கு சூப்பராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com