சூப்பர் சுவையில் ஆம்லெட் கிரேவி - காலிஃபிளவர் 65 செய்யலாம் வாங்க!

Let's make omlet gravy - Bittergourd gravy
omlet gravy - Bittergourd gravy
Published on

ன்றைக்கு சுவையான ஆம்லெட் கிரேவி மற்றும் காலிஃபிளவர் 65 ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

ஆம்லெட் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்.

ஆம்லேட் செய்ய,

முட்டை-4

உப்பு-1/2 தேக்கரண்டி.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-1

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

மசாலா அரைக்க,

கொத்தமல்லி-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

முந்திரி-4

வெங்காயம்-1

தக்காளி-1

பட்டை-1 துண்டு.

இஞ்சி-1 துண்டு.

பச்சை மிளகாய்-1

வரமிளகாய்-1

பூண்டு-4.

கொத்தமல்லி-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

கிரேவி செய்ய,

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

பிரிஞ்சி இலை-1

வெங்காயம்-1

வரமிளகாய்-3

கருவேப்பிலை-சிறிதளவு.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/2 தேக்கரண்டி.

உப்பு-1/2 தேக்கரண்டி.

தேங்காய் பால்-1/2 கப்.

ஆம்லெட் கிரரேவி செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் 4 முட்டை எடுத்துக்கொண்டு ½ தேக்கரண்டி உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அடித்துவிட்டு ஃபேனில் ஆம்லெட் போல செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் கொத்தமல்லி 2 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, முந்திரி 4, வெங்காயம் 1, தக்காளி 1, பட்டை 1 துண்டு, வரமிளகாய் 1, பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4, கொத்தமல்லி சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி விட்டு கடுகு 1 தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1, சோம்பு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்துவிட்டு நன்றாக வதக்கிய பிறகு மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் ½ தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி, கரம் மசாலா ½ தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து 1 ½ கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் தேங்காய் பால் ½ கப் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக இதில் ஆம்லேட்டை சேர்த்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆம்லெட் கிரேவி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

காலிஃபிளவர் 65 செய்ய தேவையான பொருட்கள்.

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

காலிஃபிளவர்-2 கப்.

மைதா-2 கப்.

சோளமாவு-1/4 கப்.

பேக்கிங் பவுடர்-1/2 தேக்கரண்டி.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான வாழைப்பழ தோசை மற்றும் சிறுபருப்பு ஜவ்வரிசி பாயசம் ரெசிபிஸ்!
Let's make omlet gravy - Bittergourd gravy

காலிஃபிளவர் 65 செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் இஞ்சு பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்துவிட்டு அதில் 1 கப் தண்ணீர் விட்டு கலந்துவிட்டு 2 கப் பாதி வேக வைக்கப்பட்ட காலிஃபிளவரை சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பவுலில் 2 கப் மைதா, 1/4 கப் சோளமாவு, ½ தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து ஊறவைத்த கலவையில் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளவும்.  இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாக பிசைந்து வைத்திருக்கும் காலிஃபிளவரை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான காலிஃபிளவர் 65 தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com