
அறுசுவை உணவு உண்டு முடித்த பின் ஏதேனும் இனிப்பு வகைகள் வகைகளை சாப்பிட்டால் உணவுகள் ஜீரணிக்க எளிதாக இருக்கும் என்பார்கள். அதேபோல் குழந்தைகள் அதிகம் இது போன்ற புட்டிங் வகைகளை விரும்பி உண்பார்கள். அதற்கு ஏற்றதான எளிதாக செய்ய ஏற்ற புட்டிங் வகைகளை பார்ப்போம்.
பழசாலட் புட்டிங்
தேவை:
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 6
திராட்சை கொட்டை எடுத்து தோல் உரித்தது - தேவையானது
ஆரஞ்சு - 1
மாம்பழம் - 1 சிறியது
செய்முறை:
பழங்களை கழுவி சிறு சிறு துண்டுகளாக பக்குவமாக அரிந்து சிறிது சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்து இந்த புட்டிங் செய்தால் சிறப்பு. காயாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வரும்வரை பழங்களை அடுப்பில் வைக்கலாம்.
இந்த மாதிரி வெட்டி தயாரித்த புதிய பழங்களை புட்டிங் பாத்திரத்தில் வைக்கவும். ஜெல்லி பாக்கெட் ஒன்றில் உள்ள ஜெல்லிக் குச்சிகள் முழுவதையும் 550 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். இந்த ஜெல்லி கலவையை ஆறிய பின் பழக்கலவையுடன் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். பரிமாறும் போது போரிங் (poring) கஸ்டர்டுடன் இதை பரிமாறினால் நன்றாக இருக்கும்.
கஸ்டர்ட் புட்டிங்
தேவை:
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 150 மில்லி கிராம் அல்லது தேவைக்கு
கஸ்டர்ட் பவுடர் - 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்
விருப்பமான எசன்ஸ் - சிறிது
செய்முறை:
பாலை நன்றாக சுண்ட வைத்து அத்துடன் சர்க்கரையை கலந்து கொண்டு ஆறவைக்கவும். ஆறியபின் கஸ்டர்ட் பவுடரை கலந்து கொண்டு கட்டி விழாமல் நன்றாக பாலுடன் கலக்கவும். தேவையான எசன்ஸ் கலந்து புட்டிங் கோப்பைகளில் ஊற்றி குளிரவைக்கவும். இதில் வெண்ணிலா கஸ்டர்ட் ஒரு அடுக்கு மற்றும் சாக்லேட் கஸ்டர்ட் ஒரு அடுக்கு என்று மாற்றி மாற்றி வைக்கலாம்.
கோக்கனட் புட்டிங்
தேவை:
தேங்காய் துருவல் - 7 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை - 2
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
ரவை - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
பால்- 2 கப்
செய்முறை:
காரமல் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரையையும் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீரையும் சேர்த்து நன்கு சூடாக்கவும். பாத்திரத்தில் பிரவுன் நிறம் படியும்போது கிளற வேண்டாம். இவ்வாறு காரமல் செய்த பாத்திரத்தில்தான் புட்டிங்கை வேகவைக்க வேண்டும்.
இப்போது முட்டையை நன்றாக அடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ரவை, தேங்காய்பால், சர்க்கரையை சூடாக்கி கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி அடித்த முட்டையையும் பிடித்த எஸ்சென்ஸையும் சேர்க்கவும். இதை புட்டிங் பாத்திரத்தில் ஊற்றி 30 அல்லது 40 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.