சுவையான அவல் உப்புமா - முள்ளங்கி துவையல் ரெசிபிஸ்!

healthy  foods
healthy foodsImage credit - awesomecuisine
Published on

ன்றைக்கு ஆரோக்கியமான முட்டை அவல் உப்புமா மற்றும் முள்ளங்கி துவையல் ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

முட்டை அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்;

அவல்-1/4 கிலோ.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

இஞ்சி-1 துண்டு.

கேரட்-1 கப்.

பீன்ஸ்-1 கப்.

குடை மிளகாய்-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

முட்டை-4

உப்பு-1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

முட்டை அவல் உப்புமா செய்முறை விளக்கம்.

முதலில் ¼ கிலோ அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி சோம்பு, பூண்டு 5, பொடியாக நறுக்கிய 1 துண்டு இஞ்சி, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கவும்.

இத்துடன் சிறிதளவு நறுக்கிய குடை மிளகாய், சிறிதாக நறுக்கிய கேரட் 1 கப், சிறிதாக நறுக்கிய பீன்ஸ் 1 கப், கருவேப்பிலை சிறிது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து பிரட்டிவிட்ட பிறகு 4 முட்டையை சேர்த்து பொரியல் மாதிரி செய்து அத்துடன் எடுத்து வைத்திருக்கும் அவலை சேர்த்துக்கொள்ளவும்.

அவலை நன்றாக கிளறிவிட்ட பிறகு கொத்தமல்லி சிறிதளவு தூவி பரிமாறவும். சூப்பர் சுவையில் முட்டை அவல் உப்புமா தயார். காலை உணவுக்கு ஆரோக்கியமான இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

முள்ளங்கி துவையல் செய்ய தேவையான பொருட்கள்.

எண்ணெய்- தேவையான அளவு.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

மல்லி-1/2 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

சீரகம்-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

சின்ன வெங்காயம்-10.

முள்ளங்கி-1/4 கிலோ.

கருவேப்பிலை-சிறிதளவு.

கொத்தமல்லி-சிறிதளவு.

உப்பு-1/2 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் சுவையில் முந்திரி பகோடா - முட்டை மிட்டாய் செய்யலாமா?
healthy  foods

முள்ளங்கி துவையல் செய்முறை விளக்கம்.

முதலில் கடாயில் எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மல்லி ½ தேக்கரண்டி, வரமிளகாய் 5 சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பூண்டு 5, சின்ன வெங்காயம் 10, நறுக்கிய முள்ளங்கி ¼ கிலோ சேர்த்து இத்துடன் கருவேப்பிலை சிறிதளவு, கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது அரைத்த பவுடருடன் மிக்ஸியில் இதையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சூப்பரான முள்ளங்கி துவையல் தயார். இதை நெய் விட்டு சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com