கத்தரிக்காய் மொச்சை சாதமும், தோதாக நேந்திரம் பழ ராய்தாவும் செய்வோமா?

Cooking
Cooking
Published on

கத்திரிக்காய் மொச்சை சாதம்:

பச்சரிசி  சாதம் 2 ஆழாக்கு 

வரி கத்திரிக்காய் கால் கிலோ மொச்சை  2 கைப்பிடி

பச்சை மிளகாய் 2

புளி எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

உப்பு தேவையானது

பெருங்காயத்தூள் சிறிது

தாளிக்க: கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு  காய்ந்த மிளகாய் 

மொச்சையை தனியாக தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வத்தல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். புளித்தண்ணீரை கரைத்து விட்டு, உப்பு சேர்த்து வேகவைத்த மொச்சையையும் சேர்த்து மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

புளி வாசனை போய் கெட்டியானதும் கிள்ளிய கறிவேப்பிலையை சேர்த்து இறக்கி, உதிர் உதிராக வடித்துள்ள சாதத்தில் போட்டுக்கலந்து மேலாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு கிளறி பரிமாற மிகவும் ருசியான கத்திரிக்காய் மொச்சை சாதம் தயார்.

இதையும் படியுங்கள்:
குஜராத்தி ஸ்பெஷல் மேத்தி முத்தியா, சிறுதானிய முத்தியா செய்து சுவைப்போமா?
Cooking

நேந்திரம் பழ ராய்தா:

நேந்திரம் பழம் 1 

பச்சை மிளகாய் 1 

உப்பு சிறிது 

தயிர் 1 கப்

கறிவேப்பிலை சிறிது

தாளிக்க: கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் 2

கனிந்த நேந்திரம் பழம் ஒன்றை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிது, தேவையான  உப்பு சேர்த்து, கடைசியாக அதிகம் புளிப்பில்லாத ஒரு கப் தயிர் சேர்த்து கலந்துவிடவும்.

இதையும் படியுங்கள்:
ருசியும், சத்தும் நிறைந்த சோயா கீமா பராத்தா!
Cooking

வாணலியில் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் தயிர் பச்சடியில் கலக்கவும். மிகவும் ருசியான இனிப்பு புளிப்பு, காரம் நிறைந்த பச்சடி தயார். இதனை கத்திரிக்காய் மொச்சை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com