சுவையான Caramel Custard எப்படி செய்யணும் தெரியுமா?

Caramel Custard Recipe
Caramel Custard Recipe

இதுவரை நீங்கள் எத்தனையோ விதமான இனிப்பை வீட்டில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், ஒரே ஒருமுறை இந்த கேமல் கஸ்டர்டு செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வேற லெவல் டேஸ்டாக இருக்கும். கேரமல் கஸ்டர்ட், கிரீம் கேரமல் என்றும் அழைக்கப்படுகிறது. இதை எடுத்து வாயில் வைக்கும்போதே அப்படியே கரைந்து வயிற்றுக்குள் சென்றுவிடும். சரியான முறையில் கேரமல் கஸ்டர்ட் செய்வதற்கு சில நுட்பங்கள் உள்ளன. அது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

  • 4 முட்டைகள் 

  • 1 கப் பால் 

  • 1 கப் க்ரீம் 

  • ¾ கப் சர்க்கரை 

  • உப்பு சிறிதளவு

  • கேரமல் தயாரிக்க ½ கப் சர்க்கரை

செய்முறை: 

ஒரு சிறிய வாணலியில் ½ கப் சர்க்கரையை சேர்த்து, மிதமான சூட்டில் கிண்டிக்கொண்டே இருங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக உருகி, பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை சுமார் 5-7 நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை பாகு சரியான பதத்திற்கு வந்ததும், கிண்ணத்தில் இதை அப்படியே எடுத்து ஊற்றி ஓரமாக வைத்துவிடுங்கள். 

அடுத்ததாக ஒரு கிண்ணத்தில், முட்டை, பால், கிரீம், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை, ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் கேரமல் மேல் ஊற்றவும். 

இப்போது இட்லி சட்டியை அடுப்பில் வைத்து, அதன் உள்ளே தண்ணீர் ஊற்றவும், பின்னர் கேமல் கஸ்டர்ட் கலவை இருக்கும் கிண்ணத்தை இட்லி சட்டியின் உள்ளே தண்ணீரில் அதிகம் மூழ்காதவாறு வைக்கவும். உங்களிடம் ஏதேனும் சிறிய ஸ்டாண்ட் இருந்தால் இட்லி சட்டியின் உள்ளே வைத்து அதன் மேலே, இந்த கிண்ணத்தை வைக்கலாம். 

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான முறையில் மோர்க் குழம்பு.. டிஸ்கோ டான்ஸ் ஆடும் சுவை நரம்புகள்! 
Caramel Custard Recipe

மிதமான சூட்டில், சுமார் அரை மணி நேரம் மூடி போடாமல் நன்றாக வேகவிட்டால், சூப்பரான சுவையில் கேமல் கஸ்டர்ட் தயார். பின்னர் இதை அப்படியே வெளியே எடுத்து வேறு தட்டுக்கு மாற்றி, உங்களுக்குத் தேவையான நட்ஸ், பழங்கள் போன்ற அலங்காரப் பொருட்களை மேலே தூவி சாப்பிட்டால், உண்மையிலேயே சொர்க்கத்தில் மிதப்பது போல இருக்கும். 

இந்த ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com