தித்திக்கும் கோதுமை-வெல்லம் அல்வா: நாவில் போட்டால் கரையும் சுவை!

Jaggery Halwa
Wheat-Jaggery Halwa
Published on

ம் வீட்டில் இருக்கும் மூன்றே பொருட்களை வைத்து ஐந்திலிருந்து பத்தே நிமிடத்தில் வாயில் போட்டால் கரையும் இந்த வீட்- ஜாகரி அல்வாவை செய்துவிடலாம். இது மிகவும் ஹெல்த்தியானது. செய்து சுடச்சுட சாப்பிட சுவையள்ளும். பாத்திரத்தில் அல்வா அப்பொழுதே காலி ஆகிவிடும். அதன் செய்முறை விளக்கம் இதோ:

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு- அரை கப்

வெல்லத்துருவல் /நாட்டு சர்க்கரை- அரை கப்

தண்ணீர்- அரை கப்

நெய் -மூன்று டேபிள் ஸ்பூன்

ஏலப்பொடி -இரண்டு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர்விட்டு நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத் துருவலை கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி கரைத்துக்கொள்ளவும். அது கெட்டி பாகாக வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. சர்க்கரை நன்றாக கரைந்து இருந்தால் போதும். அதை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், ஸ்டவ்வை லோ ஃப்ளேமில் வைத்து கோதுமை மாவைச் சேர்த்து நன்றாக ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வரை வறுக்கவும். வறுக்கும்போது கோதுமை மாவில் கலர் நன்றாக மாறி வரும். அப்பொழுது வடிகட்டி வைத்த ஜாகரி சிரப்பை ஊற்றி அடிபிடிக்காமல் நன்றாக கிளறவும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் அரிய வகைத் துவையல்கள்!
Jaggery Halwa

பிறகு நெய் பிரிந்து வரும்போது ஏலப்பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாகக்கிளறி அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஐந்திலிருந்து பத்தே நிமிடத்திற்குள் வீட்டிலிருக்கும் மூன்று பொருட்களை வைத்து ஹெல்த்தியான இந்த ஸ்வீட்டை செய்து விட்டோம். நீங்களும் செய்து அசத்துங்கள்.

குறிப்பு:

மாவை எவ்வளவு நன்றாக வறுக்கிறோமோ அவ்வளவு நன்றாக ஸ்வீட் செய்ய வரும். சுவையாகவும் இருக்கும். ஆதலால் நன்றாக வறுக்கவும்.

நெய் இல்லை என்றால் அதே அளவு தேங்காய் எண்ணெயையும் சேர்த்து செய்யலாம்.

வெல்லத்திற்கு பதிலாக நாட்டு சர்க்கரையும் சேர்த்து செய்யலாம்.

வெல்லத் துருவல் /நாட்டு சர்க்கரையை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கரையவிடுவதால் அதில் உள்ள தூசு மண் போன்றவற்றை வடிகட்டி எடுப்பதற்கு எதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இது சாம்பார் வடை அல்ல; சம்பார் வடை! - ஒரு சுவையான அறிமுகம்!
Jaggery Halwa

மேலும் அது ஓரளவு கொதிநிலைவில் இருப்பதால் ஸ்வீட்டை சீக்கிரமாக செய்து இறக்குவதற்கு வசதியாக இருக்கும். மேலும் அது ஸ்வீட்டை மென்மையாக்கித்தரும்.

ஒரு கப் கோதுமை மாவு என்றால் வெல்லத் துருவல் அதில் சேர்க்கும் தண்ணீர் எல்லாம் ஒரு கப் அளவே இருக்க வேண்டும். நெய் 6 டேபிள்ஸ்பூன் தேவைப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com