கேரட் ஊத்தப்பமும், கார்ன் ஃபிளேக்ஸ் அல்வாவும்!

tasty samayal recipes
Carrot Uthappam - Corn Flakes Halwa
Published on

கேரட் ஊத்தப்பம்

தேவை: கடலை மாவு 2 கப்
கேரட் துருவல் 1 கப்
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது அரை கப்
பச்சை மிளகாய் 2
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
மிளகு, சீரகத்தூள் 1 ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவை தண்ணீர் விட்டு, உப்பு போட்டு, ஊத்தப்ப மாவு பதத்தில் கரைக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், போட்டு கலக்கவும். சிறிது நேரம் கழித்து மாவை தவாவில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும். இருபுறமும் வெந்ததும் மிளகு, சீரக பொடியை பரவலாக தூவவும். சுவையான கேரட் ஊத்தப்பம் தயார்.

கார்ன் ஃபிளேக்ஸ் அல்வா

தேவை: கார்ன் ஃபிளேக்ஸ் - 2 கப்
பசும் பால் - 2 கப்
நெய் - 3 ஸ்பூன்
மில்க் மெய்ட் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை:

2 கப் கார்ன் ஃப்ளேக்ஸை மிக்ஸியில் நைஸாக தூள் செய்து வைக்கவும்.நெய்யில் முந்திரியை வறுத்து வைக்கவும். கடாயில் 2 கப் பால் ஊற்றி தூளாக்கிய கார்ன் ஃப்ளேக்ஸை போடவும்.அடிப்பிடிக்காமல் கிளறி, மில்க் மெய்டு சேர்த்து, அல்வா பதம் வந்ததும், சிறிது நெய் ஊற்றிக் கிளறி, இறக்கி, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, அதன் மேல் வறுத்த முந்திரியை தூவிவிடவும். சுவையான கார்ன் ஃபிளேக்ஸ் அல்வா ரெடி.

இதையும் படியுங்கள்:
கடப்பா கார சட்னி - இட்லி, தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்!
tasty samayal recipes

அசத்தல் சுவையில் சூப் வகைகள்…

வெந்தயக்கீரை தண்டு சூப்

தேவை:

வெந்தயக்கீரை தண்டு நறுக்கியது - 1 கப் 

மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை: 

வெந்தயக்கீரை தண்டினை நறுக்கி, வேகவைத்து, வடிகட்டவும். அதில் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து விட்டால் சுவையான சத்தான வெந்தயக்கீரை தண்டு சூப் தயார்.

பீட்ரூட் சூப்

தேவை:

பீட்ரூட் - 2 

உருளைக்கிழங்கு -1

பெரிய வெங்காயம் - 1  

எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன் 

நறுக்கிய புதினா - 3 ஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

கிரீம் - சிறிது 

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

செய்முறை: 

பீட்ரூட், உருளைக்கிழங்கு இரண்டையும் தோல் நீக்கி, வேக வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கி, வேகவைத்த பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம் மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.. அதில் உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து, கிரீம், புதினா கலந்து இறக்கி வைக்கவும் பல சுவைகள் கலந்த பீட்ரூட் சூப் தயார் ‌

இதையும் படியுங்கள்:
இஷ்டப்பட்டு செய்யும் சமையலை கஷ்டமின்றி எளிதில் முடிக்கும் வழிகள்..!
tasty samayal recipes

கேரட் சூப்

தேவை:

கேரட் - 200 கிராம்

தக்காளி - 3 

பெரிய வெங்காயம் – 2

பூண்டு – 2 பல் 

மிளகுத்தூள் - அரை ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

மைதா மாவு - 2 ஸ்பூன் 

செய்முறை: 

கேரட், தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட், தக்காளி, வெங்காயத்தை வதக்கி, நீர் விட்டு கொதிக்க வைத்து, அரைத்து, மைதா மாவு சேர்த்து கொதி வந்ததும், உப்பு, மிளகு தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். சூடான, சுவையான கேரட் சூப் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com