
காலிஃப்ளவர் பிரியாணி
தேவையான பொருட்கள்:
நெய் _3 ஸ்பூன்
எண்ணெய்_3 ஸ்பூன்
பிரியாணி இலை _1
பட்டை_3
ஸ்டார் பூ _1/2
ஏலக்காய்_3
சோம்பு _1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் _3
(நறுக்கியது)
பச்சை மிளகாய்_5 (கீறியது)
தக்காளி _2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது_ 2 ஸ்பூன்
புதினா _1 கைப்பிடி
மல்லி இலை _ 1/2 கைப்பிடி
காலிஃப்ளவர் _1
தயிர் _3 ஸ்பூன்
மிளகாய் பொடி _1 ஸ்பூன்
கரம்மசாலா _1/2 ஸ்பூன்
உப்பு _ தேவையான அளவு
தேங்காய் பால் _ 21/2 கப்
பாசுமதி அரிசி _2 கப்
செய்முறை: முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு மூடி வைத்து பிறகு எடுத்து வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை கழுவி தண்ணீர் விட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து தீயை வைத்து குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, ஸ்டார் பூ, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பின்னர் பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்., பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும். பின்னர் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு வதக்கி தயிர் விட்டு கிளறி விடவும்.
அதன் பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு கிளறி விடவும். தேங்காய் பாலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மொத்தம் 31/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி குக்கரை மூடி தீயை மீடியமாக வைத்து 3 விசிலுக்கு வைக்கவும். பின்னர் விசில் சத்தம் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்தால் குழையாமல் மணத்துடன் கூடிய சுவையான காலிஃப்ளவர் பிரியாணி தயார்.
பின்னர் தனியாக ஒரு விரிந்த பாத்திரத்தில் தட்டி சிறிது மல்லி இலை தூவி பரிமாறவும்.
புடலங்காய் ரிங்ஸ்
தேவையான பொருட்கள்:
புடலங்காய்_1/4 கிலோ
மைதா மாவு _2 ஸ்பூன்
கார்ன் மாவு _1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது _1 ஸ்பூன்
மல்லித்தூள் _1/2 ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய்த்தூள்_1 ஸ்பூன்
கரம் மசாலா _1/2 ஸ்பூன்
உப்பு _தேவைக்கு
எண்ணெய் _தேவைக்கு
கஸ்தூரி மேத்தி _1/2 ஸ்பூன்
செய்முறை: முதலில் புடலங்காயை தோல் சீவி வட்ட வட்டமாக ரிங்ஸ் மாதிரி வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் மாவு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கஸ்தூரி மேத்தி இவற்றை போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் பிசைந்து கெட்டியாக பஜ்ஜி மாவு பக்குவத்தில் கலவையை தயார் செய்யவும். பிறகு புடலங்காய் வட்டங்களை இந்த கலவையில் முக்கி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் கொதித்ததும் தீயை சிறிது பண்ணி விட்டு ஊறவைத்த புடலங்காய் வட்டங்களை எண்ணெயில் போட்டு பொரித்து பின்னர் மறுபக்கம் திருப்பிப்போட்டு பொரித்து எடுத்து பரிமாறலாம். அட்டகாசமான புடலங்காய் ரிங்ஸ் தயார். புடலங்காய் சாப்பிடாதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.