காலிஃபிளவர் இருந்தா போதும். சாயங்கால ஸ்நாக்ஸ் முதல் இரவு டின்னர் வரை அசத்தலாம்!

cauliflower recipes
cauliflower recipes
Published on

காலிஃபிளவர் வடை

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்

பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் – 1 கப்

கடலைப் பருப்பு – 2 டம்ளர்

சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்

இஞ்சி – ஒரு துண்டு

பூண்டு – 10 பல்

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

பச்சை மிளகாய் – 6 No

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த கடலைப் பருப்புடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவைப் போட்டு அதனுடன் வெங்காயம், காலிஃபிளவர், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து பிசையவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கிரிஸ்பி காலிஃபிளவர் சில்லி

தேவையான பொருட்கள்:

காலிஃபிளவர் – 1 no

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்

மசாலா தயார் செய்ய:

அரிசி மாவு – 2 ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸ்பூன்

சோள மாவு – ½ கப்

கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்

மல்லித் தூள் – 2 ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
அடடா தேங்காய் சட்னி! - ருசி குறையாத ஒரு ரசனைப் பயணம்!
cauliflower recipes

செய்முறை:

காலிஃபிளவரை சுத்தம் செய்து நடுத்தர அளவிலான பூக்களாக பிரித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காலிஃபிளவர் பூக்களை போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

மூன்று நிமிடம் கழித்து சுடுநீரிலிருந்து காலிஃபிளவரை எடுத்து தனியாக தட்டில் வடிய விடவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் மசாலா தயாரிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பேஸ்ட் போல குழைத்து, காலிஃபிளவர் பூக்களை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த காலிஃபிளவர்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிரிஸ்பியாக வந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும்.

மேலே எலுமிச்சை சாறு பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, வெங்காயம் அலங்காரம் செய்து பரிமாறவும்.

காலிஃபிளவர் பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த நறுக்கிய காலிஃபிளவர் – 1 கப்

நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்

நறுக்கிய தக்காளி – 1 கப்

பச்சைப் பட்டாணி – 1 கப்

காய்ச்சிய பால் – ½ கப்

முந்திரிப் பருப்பு – 10

அரைக்க:

தேங்காய் துருவல் – 1 கப்

பச்சை மிளகாய் – 6 no

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 10 பல்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

கசகசா – ¼ ஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2 No

தாளிக்க:

நெய் – அரை கப்

பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, பட்டை – தலா 2 no

இதையும் படியுங்கள்:
கொத்தவரங்காய் ஸ்பெஷல்: ஒரே காய்... நான்கு அசத்தல் சுவைகள்!
cauliflower recipes

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும். தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, காலிஃபிளவர் பூக்களை சேர்த்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.

பின்னர் எடுத்து தண்ணீர் வடிய விடவும். வடிந்த பின் ஒரு ஸ்பூன் சோள மாவு, கடலை மாவு மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் போல செய்து காலிஃபிளவரை பிரட்டி காயவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு பொரித்து எடுக்கவும்.

அதே நெய்யில் காலிஃபிளவரை உடையாமல் பொரித்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பட்டாணியை சேர்த்து வதக்கி, பின்னர் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்.

பட்டாணி வெந்து, பச்சை வாசனை நீங்கியதும் பொரித்த காலிஃபிளவரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் பால் சேர்த்து இறக்கவும்.

இறுதியாக பொரித்த முந்திரியை சேர்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். காலிஃபிளவர் பட்டாணி குருமா சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com