வித்தியாசமான சுவையில் சவ்சவ், கேரட் பொரியல் மற்றும் குடைமிளகாய் கிரேவி..!

healthy samayal tips
Carrot - capsicum gravy -
Published on

வ்சவ் கேரட் பொரியல் சாதாரணமாகச் செய்யக்கூடிய மற்றும் சுவையான சைடிஷ் ரெசிபி, சாப்பாட்டிற்கு நல்ல கூட்டாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சவ்சவ் – 1 (சுத்தம் செய்து நறுக்கியது)

கேரட் – 1 (நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பச்சைமிளகாய் – 1-2 (நறுக்கியது)

கடுகு – ½ டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – சில

துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் கருவேப்பிலையும், பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வெந்து வாடியதும் சவ்சவ் மற்றும் கேரட் சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகள் நன்கு வெந்து மெல்லிய அளவில் ஆகும் வரை மூடி வேகவைக்கவும்.

காய்கள் வெந்து மெல்லியதாக ஆனதும், மேலே தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி 2 நிமிடம் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் பொடியான மிளகை தூளும் சேர்த்துக்கொள்ளலாம். சவ்சவ் கேரட் பொரியல் தயார். சாதத்துடன் பரிமாறலாம்.

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கலர்ஃபுல் பீட்ரூட் குழாப் புட்டு, தாளிச்ச இட்லி, பீட்ரூட் சட்னி - எப்படி செய்வதென்று பார்ப்போமா?
healthy samayal tips

குடைமிளகாய் கிரேவி (Capsicum Gravy) ஒரு சுவையான சைடு டிஷ் ஆகும், சாதம், சப்பாத்தி அல்லது நாணுடன் பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 2 (நறுக்கி வைக்கவும்)

வெங்காயம் – 1 (நறுக்கி வைக்கவும்)

தக்காளி – 2 (நன்றாக நறுக்கவும்)

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 இஞ்ச் துண்டு

மிளகாய் தூள் – 1 மேசை கரண்டி

மஞ்சள் தூள் – ¼ மேசை கரண்டி

தனியா தூள் – 1 மேசை கரண்டி

கரம் மசாலா– ½ மேசை கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 மேசை கரண்டி

கடுகு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – அலங்கரிக்க

செய்முறை:

முதலில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி இவற்றை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை போடவும். பின் அரைத்த பேஸ்டை சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும். 5 நிமிடம் நல்ல வாசனை வரும் வரை வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே சுவையான மாம்பழ ஜாம் செய்யலாம் வாங்க!
healthy samayal tips

நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து சுமார் 5–7 நிமிடம் வதக்கவும். ½ கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொஞ்சம் கட்டியாகி வந்ததும், கறிவேப்பிலை மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். 2 நிமிடம் பின்னர் அடுப்பை அணைத்து, மேல் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சாதம், சப்பாத்தி, ரொட்டி, அல்லது இடியாப்பத்துடன் மிகச் சிறப்பாக இருக்கும். கிரேவியை முந்திரிப்பருப்பு சேர்த்து மேலும் சாஃப்டாகவும், ரிச் ஃப்ளேவருடன் செய்யலாம்.

குடைமிளகாய் கிரேவி ஒரு மிதமான காரத்துடன் கூடிய சுவைமிக்க, மசாலா வாசனை கொண்ட, சாப்பிட சுருக்கென கவரும் ஒரு சைடு டிஷ். இது சாப்பாட்டில் ஒரு வித்தியாசமான, சத்தான மற்றும் ருசிகரமான அனுபவத்தை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com