
மொச்சைப் பயிறு சாதம்
தேவையானது:
பச்சரிசி - ஒரு கப்
பச்சை மொச்சை - அரைக்கப்
துவரம் பருப்பு அரைக்கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி -இரண்டு
பச்சை மிளகாய் -ரெண்டு
தேங்காய் துருவல் -கால் கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கடுகு, சீரகம் -தலா அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசியுடன், துவரம்பருப்பு, மஞ்சள் தூள், 4 கப் தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு மிதமான தீயில் வைத்து இறக்கவும். வெங்காயம், சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி பச்சை மிளகாய் கீறிசேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மொச்சை வேகும்வரை வதக்கவும். கடைசியில் தேங்காய் துருவல் கறிவேப்பிலை, உப்பு சேர்க்கவும்.
சாதத்தைக் கொட்டி நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சத்தான சுவையான மொச்சைப் பயிறு சாதம் ரெடி.
பச்சை மொச்சை பிரட்டல்
தேவையானது:
பச்சை மொச்சை -ஒரு கப்
சின்ன வெங்காயம் - அரை கப் (நறுக்கியது)
தக்காளி - ஒன்று (நறுக்கியது,
பச்சை மிளகாய் -ரெண்டு (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு-அரை ஸ்பூன்
எண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் -ரெண்டு டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லி இலை -சிறிது
செய்முறை:
பச்சை மொச்சை வேகவைத்து எடுக்கவும். (தோல் நீக்கவும்)
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த பச்சை மொச்சை மற்றும் சேர்த்து கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி பிரட்டவும். கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
ஒரு ஸ்பூன்கடலை மாவை நீரில் கரைத்தும் பிரட்டியும் செய்யலாம். சுவையான மொச்சை பிரட்டல் ரெடி. சாதம், பூரிக்கு தொட்டு சாப்பிடலாம்.
பச்சை மொச்சைக் குழம்பு
மொச்சை - அரை கப்
புளி -எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் -ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வறுத்து அரைக்க - சின்ன வெங்காயம் - கால் கப் தக்காளி - ஒன்று
பூண்டு -ஐந்து பல், தனியா - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
எண்ணெய் -தேவைக்கு
பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து- 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உளுந்து- ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிது கருவேப்பிலை -சிறிது
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தக்காளி -ஒன்று
பூண்டு -ஐந்து பல்
செய்முறை:
மொச்சையை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து எடுக்கவும். புளியை ஊறவைத்து கெட்டியாக சாறு எடுக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து மொச்சையைபோட்டு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் விட்டு இறக்கவும்.
வாணலியை எடுத்து வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.
நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு கருவேப்பிலை சேர்த்து வெந்த மொச்சையை நீருடன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு பச்சை வாசனை போனதும் புளிச்சாறு ஊற்றி உப்பு சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து அரைக்க, தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும் சுவையான மொச்சை குழம்பு ரெடி. சாதம், சப்பாத்திக்கு ருசியாக இருக்கும்.
மொச்சையில் பெருங்குடல் அலர்ஜியை நீக்கும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், சோடியம் சத்துக்கள் உள்ளது. தாய்ப்பால் சுரக்கும். மலச்சிக்கலை இயல்பாக்கும்.