செய்யலாம் வாங்க சியா விதை புட்டிங்.. அசரவைக்கும் சுவையில் ஆரோக்கியமான உணவு! 

Chia Seeds Recipe
Chia Seeds Recipe

சியா விதையைப் பயன்படுத்தி செய்யப்படும் புட்டிங் அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைக்காக பிரபலமான காலை உணவாக விரும்பி உண்ணப்படுகிறது. காலையில் ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட வேண்டும் என விரும்புபவர்கள் தாராளமாக இதை செய்து சாப்பிடலாம். இதை செய்வது மிகவும் எளிது மற்றும் உங்களது நாளை ஊட்டச்சத்து மிகுந்த உணவுடன் தொடங்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவுத் தேர்வாக அமைகிறது. 

சியா விதை புட்டிங் செய்யத் தேவையானப் பொருட்கள்: 

  • ¼ கப் சியா விதைகள்.

  • 1 கப் பால்.

  • 2 ஸ்பூன் சக்கரை அல்லது தேன்.

  • ஒரு துளி வெண்ணிலா எசன்ஸ்.

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் சியா விதைகள் மற்றும் காய்ச்சிய பாலை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்குங்கள்.

பின்னர் அதில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் இனிப்புக்கு சர்க்கரை அல்லது தேனை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை சுமார் பத்து நிமிடங்கள் அப்படியே வைத்தால், சியா விதைகள் திரவத்தை உறிஞ்சி சற்று தடிமனாக மாறும். 

அடுத்ததாக இந்தக் கலவை கொஞ்சம் கெட்டியானதும் பாத்திரத்தை மூடி, சுமார் 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால், அதன் சுவை அனைத்தும் ஒன்றாக இணைந்து சூப்பரான புட்டிங் தயாராகிவிடும். 

இதையும் படியுங்கள்:
கொலஸ்ட்ராலை வேகமாகக் குறைக்கும் சியா விதைகள்! 
Chia Seeds Recipe

அடுத்தது என்ன அப்படியே வெளியே எடுத்து, அழகாக வெட்டி சாப்பிட வேண்டியது தான். புட்டிங் நன்றாக வருவதற்கு, அந்தக் கலவையை முன்கூட்டியே நன்கு கிளறி விட வேண்டியது அவசியம். 

அல்லது இதில் கொஞ்சம் அகர் அகர் சேர்த்தால், சரியான பதத்தில் புட்டிங் தயாராகிவிடும். விதவிதமாக புட்டிங் தயாரிக்க உங்களுக்கு விருப்பமான பழங்கள், நட்ஸ் மற்றும் சாக்லேட் போன்றவற்றை இதில் சேர்த்தால், சுவை இன்னும் சூப்பராக இருக்கும். 

ஒருமுறை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com