‘சுடச் சுட’ Eggless Churros Recipe சட்டுன்னு செஞ்சிடலாம் வாங்க!

Churros Recipe,,,
Churros Recipe,,,www.youtube.com

சூறோஸின் அறிமுகம் ஸ்பெயினிலிருந்து ஆரம்பிக்கிறது. இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. ‘சூறா’ இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு ‘சூறோஸ்’ என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

சூறோஸ் செய்ய தேவையான பொருட்கள்.

தண்ணீர்-250ml

நெய்-2 தேக்கரண்டி.

சக்கரை-2 தேக்கரண்டி.

உப்பு-1/4 தேக்கரண்டி.

மைதா மாவு-125gm

கொரகொரப்பாக பவுடர் செய்த சக்கரை-1/4கப்.

ஏலக்காய் தூள்- ¼ தேக்கரண்டி.

சூறோஸ் செய்முறை விளக்கம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 ml தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு 125g சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் நன்றாகக் கலந்து விடவும்.

இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசையவும். இப்போது மாவு தயார்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேகில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும்  எடுத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்திற்கேற்ற எளிய அழகு பராமரிப்பு குறிப்புக்கள்!
Churros Recipe,,,

இப்போது ஒரு பவுலில் 1/4கப் சக்கரை  கொர கொரப்பாக பவுடர் பண்ணியிருக்க வேண்டும். அத்துடன் ¼ தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துவிட்டு இரண்டையும் நன்றாக கலந்துவிட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோஸை அதில் போட்டு பிரட்டி எடுக்கவும். இப்போது சுவையான சூறோஸ் தயார். இதை நுட்டெல்லா போன்ற கட்டியான சாக்லேட் சாஸூடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்குக் கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com