
மண் பானையில் சமைக்க படும் உணவை பற்றி நாம் அதிகம் சிந்திப்பதும் இல்லை அப்படி சமைப்பதும் இல்லை! ஆனால் உண்மையில், மண் பானையில் சமைக்கப்படும் உணவுக்கு ஒரு தனி சுவையும், பிரத்தியேக மணமும் உண்டு.
மண் பானையின் சிறப்பு என்ன?
மண்பானை , இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவு பாத்திரம். இதில் எந்தவித ரசாயனங்கள் சேர்க்கப்படாமல், முற்றிலும் களிமண் கொண்டு செய்யப்பட்டு, உறுதியடைய தேவையான வெப்பத்தில் சுடப்படுகிறது. எனவே, இதனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவும் முழுமையாக இயற்கையாகவே அமைகிறது.
சமைக்கும் போது வெப்பம் எப்படி பரவுகிறது?
மண் பானையில் வெப்பம் மெதுவாகவும், சமமாகவும் பரவுகிறது. அதனால் உணவின் எல்லா இடங்களிலும் சமமாக வெந்து, நல்ல சுவையுடன் தயாராகிறது. மேலும், நீராவி வெளிவராமல் , உணவின் மென்மையை பாதுகாக்கிறது.
மண் பானையின் நன்மைகள்
மண்பானைகள் இயற்கையான களிமண்ணால் செய்யப்படுவதால், அதில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இயற்கையாகவே இருக்கின்றன. உணவை அந்த பானையில் சுடும் போது, சிறிதளவு சத்துக்கள் உணவுடன் கலந்து விடுகின்றன. பானைகள் குறைந்த செலவில் கிடைக்கும். இயற்கையில் அழியக்கூடியது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. அனைத்திற்கும் மேலாக, சமைக்க பொறுமை தேவைப்படுவதால், நாம் மறந்த பொறுமையைக் கற்றுத்தருகிறது
அருமையான பாரம்பரிய உணர்வு!
மண்பானையில் தண்ணீர் வைக்கும் போது, அது இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும்.
இதற்குக் காரணம், அதில் காணப்படும் சிறிய சுவாச துளைகள். அந்த துளைகள் வழியாக சூடான காற்று வெளியேறுகிறது. இதனால், மண்பானைக்குள் இருக்கும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
இன்னும் சில வீடுகளில், மீன் குழம்பு, பாயாசம் தயிர் போன்றவை மண்பானையில் தான் தயாராகிறது . அவற்றில் அருமையான வாசனையும், தொன்மையான சுவையும் இருக்கும்.
மண் பானையில் சமைப்பது , நம் பாரம்பரியத்தின் ஓர் அங்கம். சுவை, சுகாதாரம், ஆரோக்கியம் அனைத்தையும் ஒரே பானையில் தரும் வகையில் இது அமைகிறது.