சமையல் குறிப்புகள்: சுலபமான வழிகள், சுவையான உணவுகள்!

Delicious foods
Cooking tips
Published on

க்காளியை வதக்கும்போது சிறிது சர்க்கரையைச் சேர்த்தால், தக்காளியின் சிவப்பு நிறம் மேலும் அதிகமாகி, செய்யும் வட இந்திய உணவுகளின் சுவையும் கூடும்.

இட்லி குக்கர் தட்டில் இருக்கும் இட்லிகளை சுலபமாக எடுக்க, இட்லித்தட்டைத் திருப்பி அதன் மேல் தண்ணீர் தெளியுங்கள். இட்லி சுலபமாக எடுக்க வரும்.

கலவை சாதம் கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணையைச் சேர்த்துக்கலந்து பாருங்கள். சாதம் கட்டி கட்டியாக இல்லாமல் இருப்பதுடன், சுவையும் கூடும்.

கீரை பச்சை பசேல் என்று வேகவேண்டுமானால், கீரை சமைக்கும் போது கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.

தேங்காய் உடைக்கும் முன் பச்சைத்தண்ணீரில் கழுவிவிட்டு உடைத்தால் எளிதாக உடையும்.

அடுப்பிலிருந்து நெய்யை இறக்கியவுடன், கருவேப்பிலையை மோரில் நனைத்து நெய்யில் போட்டால், கருவேப்பிலையும், மோரும் முறுகி நெய் நல்ல மணத்துடன் இருக்கும்.

சேமியா, ரவை போன்றவற்றில் உப்புமாதான் செய்யவேண்டும் என்று இல்லாமல், இட்லிகளாக செய்து சட்னியுடன் சேர்த்துச்சாப்பிடலாம்.

சேனைக்கிழங்கை வாங்கும்போது உடனே சமைக்காமல், கொஞ்ச நாட்கள் வைத்துச் சமைக்கவும். ஏனென்றால் புதுக்கிழங்கு நமைச்சலை ஏற்படுத்தும்.

எல்லாக் காய்கறிகளையும் பொடிப்பொடியாக நறுக்கி, தயிர் சேர்த்து, உப்பு போட்டு, துளி சீரகப் பொடி போட்டுவிட்டால் காய்கறிப்பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சுவையான சூப் வகைகள்: வீட்டிலேயே தயாரிக்க எளிமையான செய்முறை
Delicious foods

பாசிப்பருப்பைக் குழைந்து போகாமல், திட்டமாக வேகவைக்க ஒரு டிபன் பாக்ஸில் போட்டு குக்கரில் வைத்து வேகவைத்தால் போதும்.

பெரிய வெங்காயத்தை வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி போடுவோம். அதற்கு பதிலாக சாம்பார் வெங்காயத்தை உரித்து நீளவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கி பஜ்ஜி மாவில் தோய்த்து குட்டி குட்டி பஜ்ஜிகளாக செய்தெடுக்கலாம். சுவையாக இருக்கும்.

உளுந்துவடைக்கு அரைக்கும்போது மிக்ஸியில் முதலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டபின், அதன் மேல் உளுத்தம் பருப்பைப் போட்டு. அரைத்தோமானால், அரைத்த மாவை மிக்ஸியிலிருந்து சுலபமாக வழித்தெடுக்கலாம்.

உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்து அல்வா செய்து, சிறிது பாதாம் எஸ்ஸன்ஸ் விட்டால் அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.

எந்த வித ரசம் செய்வதானாலும், இறக்கும் முன் ஒரு கரண்டி தேங்காய்பால் சேர்த்து, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத தயிர் சேர்த்து வதக்கினால் காரக்கறியின் சுவையே அலாதிதான்.

உளுந்துவடை செய்யும்போது, சிறிதளவு சேமியாத்தூள் போட்டால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com