
வெந்தயக்கீரை தண்டு சூப்
தேவை:
வெந்தயக்கீரை தண்டு நறுக்கியது - 1 கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெந்தயக்கீரை தண்டினை நறுக்கி, வேகவைத்து, வடிகட்டவும். அதில் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து விட்டால் சுவையான சத்தான வெந்தயக்கீரை தண்டு சூப் தயார்.
******
பீட்ரூட் சூப்
தேவை:
பீட்ரூட் - 2
உருளைக்கிழங்கு -1
பெரிய வெங்காயம் - 1
எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன்
நறுக்கிய புதினா - 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கிரீம் - சிறிது
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
பீட்ரூட், உருளைக்கிழங்கு இரண்டையும் தோல் நீக்கி, வேக வைக்கவும். வெங்காயத்தை நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கி, வேகவைத்த பீட்ரூட், உருளைக் கிழங்கு, வெங்காயம் மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும். அதில் உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து கொதிக்கவைத்து, கிரீம், புதினா கலந்து இறக்கி வைக்கவும். பல சுவைகள் கலந்த பீட்ரூட் சூப் தயார்.
*******
உருளைக்கிழங்கு சூப்
தேவை:
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பால் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பாலேடு (சீஸ்) - 2
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி வெங்காயம், உப்பு சேர்த்து, வேகவைத்து, அரைத்து மைதா மாவு, பால், மிளகுத்தூள் சேர்க்கவும். பின்னர் சிறிது நீர் கலந்து சூடாக்கவும். இதனுடன் பாலேடு கலந்து, அது உருகியதும், இறக்கி மல்லித்தழை தூவினால், உருளைக்கிழங்கு சூப் தயார்.
****
கேரட் சூப்
தேவை:
கேரட் - 200 கிராம்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 2 பல்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மைதா மாவு - 2 ஸ்பூன்
செய்முறை:
கேரட், தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட், தக்காளி, வெங்காயத்தை வதக்கி, நீர் விட்டு கொதிக்கவைத்து, அரைத்து, மைதா மாவு சேர்த்து கொதி வந்ததும், உப்பு, மிளகு தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். சூடான, சுவையான கேரட் சூப் தயார்.