மசால் வடை சுடுகிறீர்களா? மொறு மொறுப்பான மசால் வடைக்கு சமையல் டிப்ஸ்…

Samayal tips
masaal vadai recipes
Published on

மோர்க்குழம்பு தயாரிக்கும்போது, பச்சை மிளகாய், சீரகத்தூளுடன் சிறிது பச்சைக் கடுகையும் சேர்த்து பால் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். மோர்க் குழம்பின் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

சூப் வீட்டில் தயாரிக்கும்போது கெட்டியாக இருக்க சோள மாவு சேர்ப்போம். சோளமாவின் அளவைக் குறைத்து சத்து மாவை சேர்த்தால் கூடுதல் சத்து நிறைந்த சூப் ரெடி.

வீட்டில் பஜ்ஜி செய்யும்போது மாவுடன் சாட் மசாலா கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து பஜ்ஜி செய்து பாருங்கள். பஜ்ஜி சுவை சூப்பராக இருக்கும்.

வெண்டைக்காய்களை வதக்கும்போதே ஒரு கரண்டி தயிர் சேர்த்து வதக்கினால், பிசு பிசுத்தன்மை அறவே இல்லாமல் மொறு மொறுப்பாக இருக்கும்.

மசால்வடை சுடுகிறீர்களா?  மாவை தயாரித்து, எண்ணெயில் வடையாக தட்டி சுட்டெடுக்கும் முன்பு அந்த மாவில் ஒன்றிரண்டு ஸ்பூன் ரவை யைக் கலந்து பிசைந்துசுட்டால் மொறு மொறுப்புடன் நல்ல சுவையான மசால் வடை கிடைக்கும்.

வெண்பொங்கல் செய்யும்போது, குக்கரைத் திறந்த சூட்டோடு, ஆறின பாலை இரண்டு கரண்டி அளவு அதில் வீட்டுக்கிளறி, மசித்துவிட்டால், பரிமாறும்போது நன்றாக இளகி இருப்பதுடன், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

முறுக்கு வகைகளை செய்ய ஆரம்பிக்கும்போது, அடுப்பில் வானலியை வைத்து, எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் காயவிடுங்கள். மாவு பிசைவதற்கும், எண்ணெய் காய்வதற்கும் சரியாக இருக்கும். காய்ந்த எண்ணையில் இருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் ஊற்றிப் பிசைந்தால் முறுக்கு கரகரப்பாக இருப்பதோடு, கருகாமலும் வரும்.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், வாசனையும் கொடுக்கும் சாஸ் மற்றும் ஜாம் வகைகள்!
Samayal tips

தோசைமாவு புளித்துவிட்டதா? அதில் பாதியளவு கோதுமை மாவு, பாதியளவு ரவை எனக்கலந்து தேவையான உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து  தோசை வார்த்தால் சுவையான புளிப்பில்லாத தோசை கிடைக்கும்.

மொறு மொறு அடை செய்ய அடைமாவை எண்ணெய் தடவிய கல்லில் வட்டமாக ஊற்றி, மாவில் கொஞ்சம் துளைகள் போடுங்கள். அந்த துளைகளில் எல்லாம் சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி,  மூடிவைத்து வேகவிடுங்கள். அடைகள் மொறு மொறுவென்று இருக்கும்.

பொடியாக அரிந்த ஏதாவது ஒரு கீரை, துருவின முள்ளங்கி, புதினா, இஞ்சி, பூண்டு விழுது, இப்படி எதாவது ஒன்றை ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகவும் ருசியாக இருக்கும்.

தினமும் காலையில் சமையல்செய்யத் துவங்கும்முன் பருப்பு வகைகள்,  அரிசி என குக்கரில் வேகவைக்க வேண்டிய பொருட்களை வெவ்வேறு பாத்திரங்களில் ஊறவைத்து விடுங்கள். பிறகு குக்கரில் வேகவைத்தால் வழக்கத்தை விட சீக்கிரமாக வெந்துவிடும்.

பச்சை மிளகாய்களை ஈரமில்லாமல் துடைத்து, ஒரு டப்பாவில் போட்டு மேலே மஞ்சள் தூளைத்தூவி காற்றுப்புகாமல் மூடி வையுங்கள். பல நாட்கள் பச்சை மிளகாய் ஃ ப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com