சம்மரை சமாளிக்க உதவும் ஜில் ஜில் கூல் கூல் ரெசிபிக்கள்!

cool recipes
summer foods
Published on

கோடையில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுகட்டி உஷ்ணத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்க விதவிதமான கூல் ரெசிபிஸ் செய்வோமா… பத்திய சமையலுக்கும் பயன்படும் இந்தக் கூட்டில் பச்சை மிளகாயை தவிர்த்து இரண்டு மிளகுத் தூள் சேர்க்கவும்.  

நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் தேங்காய்ப்பால் கூட்டு: 

சுரைக்காய் 1 மீடியம் சைஸ் 

பயத்தம் பருப்பு 1/4 கப்

பால் 1/2 கப்

தேங்காய் பால் 1 கப் 

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

உப்பு சிறிதளவு 

அரைக்க: 

தேங்காய் சிறிது, சீரகம் 1/2 ஸ்பூன், பூண்டு 2 பல், பச்சை மிளகாய் 4

தாளிக்க: 

கடுகு, சீரகம், கறிவேப்பிலை, நல்லெண்ணெய்

சுரைக்காயை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள சுரைக்காய், பயத்தம் பருப்பு சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது தண்ணீரும் பாலும் கலந்து சுரைக்காயை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேகவைக்கவும்.

அரைக்க குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்தெடுக்கவும். குக்கரில் பிரஷர் இறங்கியதும் அரைத்துள்ள விழுதை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிது தூவி தேங்காய் பால் கலந்துவிட மிகவும் ருசியான பால் கூட்டு தயார். தேங்காய் பால் விட்டதும் கூட்டை கொதிக்கவிட வேண்டாம் ருசி மாறிவிடும்.

வெள்ளரிக்காய் பருப்பு கடையல்:

வெள்ளரிக்காய் 2 

பயத்தம் பருப்பு 1/2  கப் 

துவரம் பருப்பு 1/2 கப்

பச்சை மிளகாய் 2 

பூண்டு 4 பற்கள் 

உப்பு தேவையானது 

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பனீர் ஃபிங்கர் ஃப்ரையும், வெயிலுக்கு இதமான குலுக்கி சர்பத்தும்!
cool recipes

தாளிக்க: கடுகு, சீரகம், பூண்டு 2 பல், கறிவேப்பிலை, எண்ணெய்

பருப்புகள் இரண்டையும் கழுவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். குக்கரில்  ஊற வைத்த பருப்புகள், நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

ஆவி அடங்கியதும் எண்ணெயில் கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து  தேவையான உப்பு போட்டு கடைய மிகவும் ருசியான வெள்ளரிக்காய் பருப்பு கடையல் தயார்.

தேங்காய்ப் பால் குழம்பு: 

வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி கொண்டது.

பூசணிக்காய் 2 பத்தை 

புளி சிறிய எலுமிச்சம் பழ அளவு 

உப்பு தேவையானது 

சாம்பார்த் தூள் 2 ஸ்பூன் 

துவரம் பருப்பு 1/2 கப் 

தேங்காய் பால் ஒரு கப்

இதையும் படியுங்கள்:
வெரைட்டியான டேஸ்டில் திடீர் பாயசம் வகைகள்!
cool recipes

தாளிக்க: 

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் துவரம் பருப்பை நன்கு குழைவாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பூசணிக்காயை தோல், விதைகளை நீக்கி சின்னத் துண்டுகளாக நறுக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து புளியை நீர்க்க கரைத்துவிட்டு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பூசணித் துண்டுகள் வெந்ததும் வேகவைத்த துவரம் பருப்பை கரண்டியால் நன்கு மசித்து சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இறக்கியதும் தேங்காய்ப்பால் கலந்துவிடவும். வாணலியில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com