
பனீரில் பக்கோடா, குழம்பு, புலாவ், குருமா என்று எதை செய்தாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவோம். பனீர் பிங்கர் ஃப்ரை என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பதார்த்தம். அதன் செய்முறை இதோ:
செய்ய தேவையான பொருட்கள்:
விரல் நீள துண்டுகளாக்கிய பனீர்- 200 கிராம்
மைதா மாவு ,சோள மாவு தலா- ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் ,மிளகாய் தூள் தலா- அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு- 4 சொட்டு அளவு
பிரட் தூள், எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவுகளுடன் மிளகாய்த் தூள், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை முக்கி எடுத்து, பிரட் தூளில் புரட்டி கடாயில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். அசத்தலாக இருக்கும் இந்த ரெசிபியை அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு இது குதூகலத்தை கொடுக்கும். செய்து அசத்துங்கள்.
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்:
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெரி -12
வெண்ணிலா ஐஸ்கிரீம்- ஒரு கப்
பால் -கால் கப்
நட்ஸ் பிளேக்ஸ்- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரியை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். அதில் மூன்று துண்டுகளை எடுத்து வைத்து விடவும் . ஐஸ்கிரீமிலும் ஒரு ஸ்பூன் எடுத்து வைத்து விடவும்.
ஸ்ட்ராபெர்ரியுடன் பால், ஐஸ்கிரீம் சேர்த்து நுரை வர அடித்து எடுக்கவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே ஸ்ட்ராபெரி துண்டுகள், சிறிதளவு ஐஸ்கிரீம், ஒரு டீஸ்பூன் நட்ஸ் ப்ளேக்ஸ் தூவி பரிமாறவும்.
குலுக்கி சர்பத்:
செய்யத் தேவையான பொருட்கள்:
எலுமிச்சைப் பழ ரசம் -2 டேபிள் ஸ்பூன்
சீனி- நாலு டேபிள் ஸ்பூன்
உப்பு -ஒரு சிட்டிகை
ஒரு ஸ்பூன்- சப்ஜா விதைகள் ஊற வைத்தது .
செய்முறை:
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் குலுக்கவும். இந்தக் குலுக்கி ஷர்பத் வெயிலுக்கு இதமாக இருக்கும். இதில் உள்ள சப்ஜா விதை நல்ல குளிர்ச்சியைத் தரும்.