குளிர்ச்சியான குல்பந்தா (Kulfi Falooda) மற்றும் காரசாரமான பாட் பவ் பாஜி!

healthy recipes in tamil
Kulfi Falooda - Bhat Pau Bhaji
Published on

குல்பந்தா (Kulfi Falooda) என்பது ஒரு வித்தியாசமான, மல்டிலேயர் இந்திய டெசர்ட். இது மிகவும் குளிர்ச்சியான, அழகான, சத்தான இனிப்பாகும். இதை செய்ய

தேவையான பொருட்கள்:

குல்ஃபி – 2 குச்சி

பாலூதா நூடுல்ஸ் – ¼ கப் (பாசிப்பயறு நூடுல்ஸைப் போல் மெல்லியதாக இருக்கும், )

சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன்

தண்ணீர் – ½ கப் (சப்ஜா ஊறவைக்க)

ரூஹாஃப்ஸா சிரப் அல்லது(ரோஸ் சிரப்) – 2 மேசைக்கரண்டி

பால் – ½ கப் (கொதிக்கவைத்து ஆறவைத்தது)

சுக்கு, ஏலக்காய் பொடி – சிறிதளவு

வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 ஸ்கூப்

வெட்டிய முந்திரி, பிஸ்தா – அலங்கரிக்க

செய்முறை:

சப்ஜா விதைகளை ½ கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். நன்கு ஊறி வந்ததும் வடிகட்டி வைக்கவும். ½ லிட்டர் தண்ணீரில் நூடுல்ஸைப் போட்டு 5-7 நிமிடம் மிருதுவாக வேக வைத்து, வடிகட்டி குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு நீளமான கண்ணாடி கப் எடுத்து அதில் கீழே சப்ஜா விதைகள், அதற்கு மேல் வேகவைத்த பாலூதா, அதன் மேல் ரூஹாஃப்ஸா சிரப்பும் ஆறிய பாலும் ஊற்றவும். ஒரு குல்ஃபி குச்சியை நடுவில் வைக்கவும். விருப்பப்பட்டால் ஐஸ்கிரீம் ஒரு ஸ்கூப்பும் மேலே வைக்கவும். மேலே வறுத்த முந்திரி, பிஸ்தா, ரூஹா சிரப்புடன் அலங்கரிக்கவும்.

மதிய உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேரக் குளிர்ச்சிக்காக பயன்படுத்தலாம்.

பாட் பவ் பாஜி (உருளைக்கிழங்கு வடா) என்பது மகாராஷ்டிரா மாநிலத்தின் பிரபலமான தெருவணவு. இது “இந்திய பூரி பர்கர்” என்று அழைக்கப்படும் ஒரு காரமான மற்றும் சுவையான ஸ்நாக்.

இதையும் படியுங்கள்:
வாழைக்காய் தோல் சீவி தூக்கி போடுவீங்களா? என்னங்க... இப்படி துவையல் செஞ்சு பாருங்க!
healthy recipes in tamil

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 3 (வேகவைத்து மசித்தது)

காய்ந்த மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிது

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – வதக்க

பஜ்ஜி மாவுக்காக:

பயிறு மாவு – 1 கப்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோடா – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

சட்னிகள் (விருப்பம்):

பச்சை கொத்தமல்லி சட்னி

பூண்டு சிவப்பு சட்னி

மற்றவை:

பாவ் பன்கள் – 4

சுடு பச்சை மிளகாய் – சில

வெண்ணெய் – சிறிது

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி–பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பிசைந்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சிறிய உருண்டைகளாக (vada shapes) செய்து வைக்கவும்.

பயிறு மாவுடன் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு, சோடா சேர்த்து தடிமனாக கலக்கவும். உருளை உருண்டைகளை மாவில் மூழ்க வைத்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
கீரைகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் தெரியுமா?
healthy recipes in tamil

பாவ் ரொட்டியை நடுவில் வெட்டி, உள்ளே கொத்தமல்லி சட்னி / பூண்டு சட்னி தடவும். நடுவில் வடா வைத்து . வெண்ணெயில் வதக்கி பரிமாறலாம்.

சுடுசுடு பாவ் + வடா + சட்னி = சூப்பர் ஸ்நாக். மழைக்காலத்தில் தேநீர் உடன் அருமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com