
க்ரீம் பாலக் சூப் செய்ய தேவையான பொருட்கள்:
தண்டுகளோடு நறுக்கிய பாலக்கீரை- ஒரு கப்
நறுக்கிய வெங்காயம்- ஒன்று
நசுக்கிய பூண்டு பல்- நான்கு
தேங்காய் எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் -ஒரு டீஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் -அரை கப்
மிளகுத்தூள் -ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகத்தை பொரிய விட்டு, வெங்காயம், கீரை, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து நைசாக மிக்சியில் அரைக்கவும். இதை கடாயில் ஊற்றி ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பின்னர் சூப் கப்களில் ஊற்றி வறுத்த முந்திரி ஒன்றை சேர்த்து மிதக்கவிட்டு பரிமாறவும். இந்த கீரை சூப் குளிர்ச்சியைத் தரும்.
சேனைக்கிழங்கு புட்டு
செய்ய தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து வெட்டிய துண்டுகள் பெரிதாக- நான்கு
தேங்காய் துருவல் -அரை கப்
பெரிய வெங்காயம் நீளமாக அரிந்தது -2
வரமிளகாய்- 2
மஞ்சள் பொடி -இரண்டு சிட்டிகை
சாம்பார் பொடி -ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ,கருவேப்பிலை தாளிக்க -தேவையான அளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு கடாயில் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து பெரிதாக நறுக்கிய சேனைக்கிழங்கை முக்கால் வேக்காடாக வேகவைத்து, ஆற வைத்து துருவியில் துருவிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை தாளித்து வெங்காயத்தை நன்றாக வதக்கவும். வதங்கியவுடன் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி அதில் துருவிய சேனையை சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு இறக்கவும். சேனைக்கிழங்கு புட்டு ரெடி. இதை சாம்பார், ரசத்துடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். மூலம், மூலச் சூடு போன்றவற்றை தணிக்கும் பண்புடையது இந்த புட்டு.