

கோடையில் உடலைக் குளிரவைக்கும் ராகி அம்பலி உடலுக்கு ஆரோக்கியமானது. இது புளிக்க வைக்கப்பட்ட ராகி பானமாகும். இது கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் அதிகம் விரும்பப்படுகிறது. அங்கு அதிகம் ராகி விளைவதால் அங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ளது. ராகியில் கால்சியம், நார்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை புளிக்க வைப்பதால் ப்ரோபயாடிக்குகள் அதிகமாகி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை சீராக வைக்கக் கூடியது. இது உடல் குளிரவைக்கக் கூடியது. கோடையில் உடலை நல்ல நீரேற்றத்துடன் வைக்கக் கூடியது.
தேவையானவை:
ராகி மாவு. 3டேபிள்ஸ்பூன்
தண்ணீர். 2கப்
மோர் அரைகப்
உப்பு கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
சீரகம் பொடி அரை ஸ்பூன்
ராகி மாவை முதலில் சிறிது நீர் விட்டு கெட்டி பேஸ்டாக்கி கரைக்கவும். பிறகு மிச்ச தண்ணீரையும் சேர்த்து இதை குறைந்த தீயில் வைத்து வேகவைக்கவும். கையால் கலந்து விட்டுக் கொண்டிருக்கவும்.
இது சிறிது கெட்டியான பிறகு, ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். இது நன்கு ஆறியதும் மூடி வைத்து கட்டிலிருந்து பத்துமணி நேரம் வரை புளிக்கவிடவும்.
நன்கு புளித்த பிறகு நன்கு கலக்கவும். இதில் மோர், உப்பு மற்றும் சீரகம் பௌடர் சேர்க்கவும். இதை குளிரவைத்து உட்கொள்ளவும்.
மாம்பழ ஃபிர்ணி
கோடையில் மாம்பழ ஃபிர்ணியை உண்ணச் சுவையாக இருக்கும். இது வட இந்தியாவின் உணவாகும். பண்டிகை நாட்களில் இது தயாரிக்கப்படுகிறது. இதில் மைதாவோ சீனியோ சேர்ப்பதில்லை. இது இயற்கையான இனிப்பை கொண்டது. சீனிக்கு பதிலாக பேரீச்சை மற்றும் வெல்லமும் சிலசமயம் சேர்க்கப்படுகிறது. அரிசியை அரைத்து பாலில் வேகவைத்து பயன்படுத்தப்படுகிறது. நல்ல பழுத்த மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் ஏற்ற உணவாகும்.
ஃபிர்ணி தயாரிக்க தேவையானவை:
கால் கப் அரிசி
பால் 3கப்
மாம்பழக் கூழ் 1கப்
வெல்லம் 2டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பௌடர் அரை டீஸ்பூன்
அரிந்த கொட்டைகள் ஒரு டேபிள் ஸ்பூன்.
தயாரிப்பு:
அரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். பாலை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து அதில் அரைத்த அரிசி விழுதை சேர்த்து கட்டியில்லாமல் வேகவைக்கவும். இது கெட்டியாகும் வரை வேகவைக்கவும். பிறகு வெல்லம் மற்றும் பேரீச்சையை சேர்க்கவும்.
இது நன்கு ஆறிய பிறகு மாம்பழக்கூழை சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்து ஃப்ரிட்ஜ் ஜில் இரண்டு மணிநேரம் குளிரவைத்து உட்கொள்ள வேண்டும். ஆராய்ச்சியின்படி இதில் கார்போஹைட்ரேட்,புரதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவாகக் கருதப்படுகிறது.
கோடையில் ஏற்படும் உஷ்ணத்தைத் தடுத்து நம் உடல் குளிர்ச்சியாக வைக்கிறது ராகி அம்புலி. இனிப்புச் சுவை மிக்க மாம்பழ ஃபிர்ணி கோடைக்கு உள்ளதோடு சமச்சீரான ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது.