

கார்ன் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதைக்கொண்டு ஈஸியாக குழந்தைகளை கவரும் வகையில் செய்யக்கூடிய சில கார்ன் ரெசிபிகள் இதோ இந்த பதிவில்.
கார்ன் தால் பால்ஸ்
தேவையானவை: கார்ன்-1/2 கப்,முழு பாசிப்பயறு-1/2கப்,ப மிளகாய் -2, இஞ்சி-1அங்குலத் துண்டு, வாழைக்காய் -1, நறுக்கிய கொத்தமல்லி -1டீஸ்பூன், பெருங்காயத்தூள் -1சிட்டிகை, ப்ரெட் க்ரம்ப்ஸ்-1/4கப், மைதா-2டேபிள் ஸ்பூன், எண்ணெய் -பொரிக்க, உப்பு -தேவைக்கு.
செய்முறை:
வாழைக்காயை வேகவைத்து ,தோல் நீக்கி மசிக்கவும்.ப பயறை நீரை வடித்து விட்டு, இஞ்சி, ப மிளகாயுடன் அரைக்கவும். கார்னை கரகரப்பாக அரைத்து இதில் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, அரைத்த பயிறு மசித்த வாழைக்காய் சேர்த்து சின்ன சின்ன பால்ஸ் ஆக உருட்டி மைதா கரைசலில் தோய்த்து எடுத்து ப்ரெட் க்ரம்ப் ல் ரோல் செய்து எண்ணையில் பொரித்து எடுக்கவும். கெட்சப் உடன் பரிமாறவும்.
கார்ன் ரோல்
தேவையானவை: கார்ன்-2கப்,உ கிழங்கு -வேக வைத்து, மசித்தது,-1கப், இஞ்சி, பூண்டு பேஸ்ட் -2டேபிள் ஸ்பூன்,அரிசி மாவு -3டேபிள் ஸ்பூன், கரம் மசாலா 1/2டீஸ்பூன், ஆம்ச்சூர் பவுடர்-1/2டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, காய்ந்த மிளகாய் -தேவைக்கு, ப்ரெட் க்ரம்ப்ஸ்-1/2கப், எண்ணெய் -பொரிக்க.
கார்னை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து மற்ற அனைத்தையும் இதில் சேர்த்து கபாப் ஆக தட்டி ப்ரெட் க்ரம்ப்ஸ் ல் புரட்டி தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். கெட்சப் உடன் பரிமாறவும்.
கார்ன் ஃபிர்ணி
தேவையானவை:
துருவிய மிருதுவான கார்ன்-1/2கப், ஃபுல் கிரீம் பால்1/2லி, அரிசி மாவு 2டேபிள் ஸ்பூன், குங்குமப்பூ -10, பிஸ்தா-1டேபிள் ஸ்பூன், நறுக்கிய பாதாம்-2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள், சர்க்கரை -தேவைக்கு.
செய்முறை:
1/4கப் பாலை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதிப் பாலை கொதிக்கவிட்டு, துருவிய கார்ன், குங்குமப்பூவை சேர்த்து மெல்லிய தணலில் 5-6 நிமிடங்கள் வேகவிடவும். அரிசி மாவை தண்ணீரில் கரைத்து உடன் சேர்க்கவும். கார்ன் வெந்து கெட்டியானதும், டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் ஐ சேர்த்து சர்க்கரையையும் சேர்க்கவும். பிறகு பிஸ்தா, பாதாம், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து பரிமாறவும்.
இவை நான் வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பதை எழுதியுள்ளேன்.