Tasty chips recipes
crispy chips recipes

நேந்திரம் பழ சிப்ஸ் - உருளைக்கிழங்கு சிப்ஸ் ஓவனில் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Published on

வனில் சிப்ஸ் (Oven Baked Chips) சுடுவது மிகவும் ஆரோக்கியமானதும் சுலபமானதும் ஆகும். இது deep-frying விட குறைந்த எண்ணெய் பயன்படுத்துகிறது.  உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் நேந்திரம் பழ சிப்ஸ்  ஓவனில் சுடும் முறைகளை தனித்தனியாக பார்க்கலாம்:

உருளைக்கிழங்கு சிப்ஸ்  ஓவனில் சுடும் முறை

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2

சூரியகாந்தி எண்ணெய் – 1.5 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

மிளகாய்தூள் / பெருங்காயம் – தேவையான அளவு

செய்முறை: உருளைக்கிழங்கை மெதுவாக மிக மெல்லிசாக சதுர வடிவில் சீவி கொள்ளவும். குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து, சிறிது நார்ச்சத்தை நீக்கவும் (சிப்ஸ் crisp ஆகும்). துடைத்து ஆறவைத்து, சிறிது எண்ணெய், உப்பு, மசாலா கலந்து நன்றாக பூசவும்.

பேக்கிங் டிரே-யில் parchment paper / oil spread செய்து உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஓரமோரம் வைக்கவும். ஓவனை 180°C (350°F) வெப்பத்தில் முன் சூடாக்கி, சிப்ஸ்களை 20–25 நிமிடங்கள் வரை சுடவும். நடுவில் ஒரு முறை திருப்பவும்.  மஞ்சளாக crispy ஆனவுடன் வெளியே எடுக்கவும்.

நேந்திரம் பழ சிப்ஸ் – ஓவனில் சுடும் முறை

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம் (காய்ப்பழம்) – 2

தேங்காய் எண்ணெய் _ 1.5 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

மிளகுத்தூள்  _ தேவைக்கு

செய்முறை: பழத்தை தோல் சீவி, மெல்லிய வளைய வடிவில் வெட்டவும். வெட்டியதும் உப்பு கலந்து  சற்று நேரம் ஊறவிடலாம். ஓரளவு எண்ணெய் தூவி கிளறவும். பேக்கிங் டிரே-யில் ஓரமோரம் அடுக்கவும். ஓவனை 180°C (350°F) வெப்பத்தில் முன் சூடாக்கி, சுமார் 20 நிமிடங்கள் வரை சுடவும். மத்திய பகுதியில் திருப்பவும். பழுப்பு / தங்க நிறம் வந்ததும் வெளியே எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
நவராத்திரிக்கு மட்டுமல்ல எப்போதுமே சத்தான சுண்டல் செய்து அசத்தலாம்…!
Tasty chips recipes

Crispiness அதிகம் வேண்டுமானால், உப்பில் ஊறவைத்து, துடைத்து சுடலாம். எண்ணெய் இல்லாமல் விரும்பினால் Oil spray பயன்படுத்தலாம். ஓவனுக்கு பதிலாக ஏர் ஃப்ரையர் இருந்தால், அதே முறையை 160°Cல் 10–12 நிமிடங்கள் முயற்சிக்கலாம்.

நன்மைகள்:

Deep-frying இல்லாமல் குறைந்த எண்ணெய், குறைந்த கலோரிகள், வீட்டிலேயே சுத்தமாக செய்யலாம்.

சுவை மற்றும் பயன்பாடு அடிப்படையில்

உருளைக்கிழங்கு சிப்ஸ், சுவைமிருதுவாகக் கடிக்கும், உப்பு, மசாலா சேர்க்கைகள் உணவுடன் சேர்க்கும் போதும் சாதாரண ஸ்நாக் அல்லது பியரில் சேர்க்கலாம். சற்று தடிமனானது,      பல்வேறு மசாலா, காரம், பீங்கான் போன்ற வேரியண்ட்ஸ்.

நேந்திரம்பழ சிப்ஸ், சுருண்டு, நேரடி பழ ருசி. சாப்பாட்டுடன் கூட சாப்பிடுவார்கள் (கேரள உணவுடன்) பெரும்பாலும் உப்பு/மிளகு சேர்க்கலுடன்.

உருளைக்கிழங்கு சிப்ஸும் (Potato chips), நேந்திரம் பழ சிப்ஸும் (Nendran banana chips) இரண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பிரபலமான ஸ்நாக் வகைகள். ஆனால், “சிறந்தது எது?” என்பது  தேவையும் ஆரோக்கிய முக்கியத்துவத்தை யும் பொறுத்தது. 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகள் சில..!
Tasty chips recipes

ஆரோக்கியம் நோக்கில் நேந்திரம் பழ சிப்ஸ் சற்று சிறந்த தேர்வாக இருக்கலாம் (நார்ச்சத்து, இயற்கை சத்து காரணமாக).

சுவை, குறைவான நார்ச்சத்து, சுழற்சி நோக்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

logo
Kalki Online
kalkionline.com