

வெந்தயக் கீரை வடை
தேவை:
வெந்தயக் கீரை – 1 கப் (நறுக்கியது)
கடலைப் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 சிறு துண்டு
பூண்டு – 2 பல் (விருப்பப்படி)
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – ½ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
கடலை பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் சேர்க்காமல் கொர கொரப்பாக அரைக்கவும். அதில் நறுக்கிய வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும்.
சிறு சிறு வடைகளாகத் தட்டி, மிதமான தீயில் எண்ணெயில் பொரிக்கவும். சுவையான வெந்தயக் கீரை வடை தயார்.
முருங்கைக்கீரை வடை.
தேவை:
கடலை பருப்பு – 1 கப்
முருங்கைக்கீரை – ½ கப்
வெங்காயம் – 1
உப்பு - தேவைக்கேற்ப,
பச்சை மிளகாய் - 3
செய்முறை:
கடலைப் பருப்பு ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் முருங்கைக் கீரை, வெங்காயம், உப்பு சேர்த்து உருட்டி, வடை மாவு பதத்திற்கு செய்து, சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மொறு மொறு முருங்கைக் கீரை வடை ரெடி.
முளைக்கீரை வடை
தேவை:
முளைக்கீரை - 1 கட்டு
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் - 1
பெருங்காய தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுந்தை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ப.மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மொறு மொறு முளைக்கீரை வடை ரெடி.