

ஓட்ஸ் ரவா தோசை
தேவையானவை:
ஓட்ஸ் -1கப்,ரவா-1/4கப்,கடலைமாவு1/4கப்,புளிப்பில்லாத மோர்-2கப், வெங்காயம் -2, ப. மிளகாய் -3, சீரகம் -1டேபிள் ஸ்பூன்,மிளகு-1டேபிள் ஸ்பூன், முந்திரிப் பருப்பு -5-6, கருவேப்பிலை, உப்பு _தேவைக்கு.
செய்முறை:
ஓட்ஸை பொடித்துக் கொள்ளவும். மோரில் ஓட்ஸ் மாவு,ரவை, கடலைமாவு, உப்பு சேர்த்து கரைக்கவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்கவும். பமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி முந்திரிப் பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் கலந்து சற்று நேரம் வைத்திருந்து பின் மெல்லிய தோசைகளாக ஊற்றி ரோஸ்ட் ஆனதும் எடுக்கவும். கார சட்னி,சாம்பாரும் பரிமாறவும்.
ஓட்ஸ் இனிப்பு குழிப்பணியாரம்.
தேவையானவை:
ஓட்ஸ் -2கப், வெல்லம்-1கப், தேங்காய் பால் -1/2கப், சுக்குத்தூள்-1சிட்டிகை, ஏலத்தூள்-1டீஸ்பூன், சமையல் சோடா-1சிட்டிகை.
செய்முறை:
ஓட்ஸை பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்துக் கொண்டு வடிகட்டி சேர்க்கவும். பின் உப்பு, தேங்காய் பால்,சுக்குத் தூள், ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து பணியாரக்கல்லில் நெய் விட்டு மாவை ஊற்றி வெந்ததும் மறுபுறம் திருப்பி சிவந்ததும் எடுக்கவும்.
ஓட்ஸ் சப்பாத்தி
ஓட்ஸ்-2கப், உப்பு, கோதுமை மாவு (மல்ட்டி க்ரெயின் மாவு)-3கப், காய்கறி துருவல்-1/4கப், ப மிளகாய், வெங்காயம் -பொடியாக ஸ்லைஸ் பண்ணியது-1கப், வெண்ணெய் -2டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஓட்ஸை பொடித்துக்கொண்டு அதனுடன் கோதுமை மாவு, உப்பு,ப மிளகாய் வெங்காயம், காய்கறி துருவல், வெண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்கு கலந்து மாவை பிசைந்து வைக்கவும். ஊறியதும் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும். வெள்ளரி, ரெய்த்தாவுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
ஓட்ஸ் பக்கோடா
தேவையானவை:
ஓட்ஸ் -3கப், பொட்டுக்கடலை மாவு,சிறுதானிய மாவு,தலா11/2 கப், உருக்கிய நெய் அல்லது எண்ணெய்,உப்பு, அரிந்த வெங்காயம், ப மிளகாய், கருவேப்பிலை, நுணுக்கிய வேர்க்கடலை, உப்பு தேவைக்கு.
செய்முறை:
மாவை நன்கு ஓட்ஸ் பவுடர், உப்பு, மிளகாய்த்தூள், பொட்டுக்கடலை மாவு, சிறுதானிய மாவுடன் கலந்து கொள்ளவும். அரிந்த வெங்காயம், ப. மிளகாய், பூண்டு தட்டியது (விருப்பம் எனில்), உடைத்த வேர்க்கடலை சேர்த்து உருக்கிய எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து காயும் எண்ணையில் போட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும். பொரித்த கருவேப்பிலையை தூவி பரிமாறவும்.