கோடை கால மருந்தாகும் தயிர்..!

health benefites
Curd for summer season
Published on

ங்கள் உணவில் தயிரைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்தலாம். தயிரில் உள்ள கால்சியம் உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது. தயிர் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். தயிரை தொடர்ந்து உட்கொள்வது வயிற்று வாயு, அஜீரணம் மற்றும் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தயிரை மோர், லஸ்ஸி, ரைத்தா போன்ற வடிவங்களிலும் பயன்படுத்தலாம்

கோடை காலத்தில் தயிர் பச்சடியை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது உங்கள் உடலுக்கு அற்புதமான ஆரோக்யமான நன்மைகளை அளிக்கிறது. இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவதன் மூலம், அத்தியாவசியமான ப்ரீபயாடிக்குகள் உடலுக்குள் சீராக சென்றடையும்.

இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், உடலில் ஏதேனும் வீக்கம் இருந்தால், அதுவும் குறையும். பிரியாணி போன்ற உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை எடுத்து கொள்ளும்போது வயிற்றுக்கு பாதிப்பு வராமல் இருக்கத்தான் தயிர் பச்சடி சாப்பிடுகிறோம்.

தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தக் கூடியது. இதை உண்பதால்   மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் பண்புகள் தயிரில் உள்ளது. இதனால் வயிறு எளிதில் சுத்தமாகும். ஒரு கிண்ணம் தயிருக்கு ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வெல்லம் உடைத்து சேர்க்கலாம்.

இரண்டையும் நன்கு கலக்கிய பின்னர் வெறும் வயிற்றில் அல்லது உணவு சாப்பிட்ட பின்னர் இதனை எடுத்துக் கொள்ளலாம். எப்படிப்பட்ட மலச்சிக்கலும் சரியாகும். வெல்லம் வெறும் இனிப்பு அல்ல. அது இயற்கையான நச்சு நீக்கிபோல் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரவையில் புதுமையான இனிப்பு, கார ரெசிபிஸ்!
health benefites

நமது உடலில் உள்ள நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் பி12 என்ற ஊட்டச்சத்து மிகவும் அவசியம். இந்த சத்து பெரும்பாலும் அசைவ உணவுகளில்தான் கிடைக்கும். ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தயிர் சேர்த்துக் கொண்டால் இந்த சத்து கிடைக்கும். காரணம் இதில் வைட்டமின் பி12 அதிகம்.

கெட்டியான ஒரு தேக்கரண்டி தயிரில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு சரும வறட்சியை குறைக்கிறது.

மேலும், இதில் உள்ள வைட்டமின் பி5 சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்றுக்களால் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது.

தயிரில் இலவங்கப்பட்டையைச் சேர்ப்பது சுவையை மேம்படுத்துகிறது. அதே சமயம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், பாஸ்டிங்  இரத்த குளுக்கோஸைக் குறைக்கவும் உதவுகிறது. கோடை காலத்தில் அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க இது உதவுகிறது.

வெயில் காலத்தில் தலை சூடாக உணர்கின்றவர்கள், தேவையான அளவு தயிரை எடுத்து தலையில் மசாஜ் செய்ய தலையில் உள்ள சூடு பறந்து விடும். கோடை காலத்தில் தலை சூடு காரணமாக தூக்கம் வரவில்லை என்று அவதிப்படுகிறீர்களா! சிறிதளவு கெட்டித் தயிரை தலையில் வைத்து அதை ஒரு துணியில் வைத்து சுற்றிக் கட்டினால் அது தலையை குளிர்ச்சி செய்து அதன் காரணமாக நல்ல தூக்கம் வரும்.

4 ஸ்பூன் அளவு தயிரை எடுத்து சிறிதளவு வினிகர்யுடன் கலந்து அந்த கலவையை பாதங்களின் தோல்களில் தடவி வர உறிந்த  தோல்கள் மறைந்து புது தோல்கள் வளரும், பாதங்களின் சொர சொரப்புத் தன்மையும் மறையும். சாதாரண முள்ளங்கியை இடித்து சாறு எடுத்து அதனுடன் தயிர் சமஅளவு கலந்து அக்கலவையை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் மறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டால்..? -அசத்தலான சமையல் குறிப்புகள்!
health benefites

ஆயுர்வேதத்தின்படி, தயிர்  மதிய வேளையில் உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது. இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர இது  சரியான அளவில் உட்கொள்வது அவசியம் அதிகமாக சாப்பிடும்போது அது நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com