
ரவை அல்வா
தேவை:
ரவை - 1கப்
தேங்காய் பால் - 1 கப் சர்க்கரை - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிது கசகசா -1 ஸ்பூன்
செய்முறை:
ரவையை சிறிது நெய்விட்டு சிவக்க வறுக்கவும். மணம் வரும்போது, தேங்காய் பால் ஊற்றி, கைவிடாமல் நெய் விட்டுக்கிளறவும். கெட்டியான பதம் வந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்தூள் தூவி, இறக்கி வைக்கவும். கசகசாவை வறுத்து பரவலாக தூவவும். ஆறியதும், வில்லைகள் போடவும். வித்தியாசமான சுவைகொண்ட ரவை அல்வா தயார்.
ரவை பக்கோடா
தேவை:
ரவை - 1 கப்
புளித்த மோர் - 1 கப்
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்
இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்
செய்முறை:
ரவையை வாணலியில் வறுத்து, உப்பு கலந்த மோரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் கலந்து பிசைந்து, பக்கோடாக்களாக உருட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாலை நேரத்திற்கு ஏற்ற, சுவையான ரவை பக்கோடா தயார்.
வித்தியாசமான 2 காம்போ ரெசிபிகள்
ஸ்வீட் சப்பாத்தி
தேவை:
கோதுமை மாவு – 2 கப்,
தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்,
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்,
நெய் – 1 ஸ்பூன்.
செய்முறை:
கோதுமை மாவை வெந்நீர் தெளித்து, நெய் சேர்த்து, நன்கு பிசையவும். அரைமணி நேரம் கழித்து, மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசை கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்து, சப்பாத்திகளின் மேல் ஊற்றி, சிறிது நேரம் ஊறியதும் எடுத்து சாப்பிடலாம். இனிப்பான இந்த சப்பாத்தி சத்துள்ளதும் கூட. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும்.
கார போளி
தேவை:
கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு தலா 1 கப்
கோதுமை மாவு 2 கப்
மல்லித்தழை நறுக்கியது அரை கப்
பெருங்காயத்தூள் சிறிது
எலுமிச்சம்பழம் 1
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் 4
செய்முறை:
கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் நீரில் ஊறவைத்து, நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, உப்பு, பச்சை மிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். கார பூரணம் தயார்.
கோதுமை மாவை நீர் விட்டு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி அவற்றில் குழி செய்து காரப்பூர்ணத்தை வைத்து தட்டி போளிகளாக இடவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு போளிகளை வேக வைத்து, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான, வித்தியாசமான, கார போளி தயார்.