ஒரு வாரம் ஆனாலும் தயிர் புளிக்காது... இதோ பாட்டி காலத்து ரகசியம்!

Curd
Curd
Published on

திய உணவில் தயிர் சாதம் இல்லையென்றால் பலருக்கு அந்த நாளே முழுமை பெறாது. கடைகளில் கிடைக்கும் பாக்கெட் தயிரை விட, வீட்டில் காய்ச்சி உறைய வைக்கும் தயிருக்குத் தனி ருசி உண்டு. ஆனால், வீட்டில் தயாரிக்கும் தயிர் ஒரே நாளில் புளித்துவிடுவதுதான் இல்லத் தரசிகளுக்கு இருக்கும் பெரிய தலைவலி. ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. 

அதுவே கடையில் வாங்கும் தயிர் பல நாட்கள் வரை புளிக்காமல் இருப்பதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் பால் பவுடர் போன்ற பொருட்களே ஆகும். ரசாயனக் கலப்பு இல்லாத வீட்டுத் தயிரையும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், ஒரு வாரம் வரை புளிக்காமலும், கெட்டியாகவும் வைத்திருக்க முடியும். அது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வெங்காயம்!

இது நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் ஒரு எளிய தந்திரம். தயிர் உறைந்த பிறகு அல்லது மோர் கரைத்த பிறகு, அதில் இரண்டு அல்லது மூன்று சிறிய வெங்காயத்தைத் தோல் உரித்து முழுவதுமாகப் போட்டு வைக்க வேண்டும். வெங்காயத்திற்குப் புளிப்புத் தன்மையை உறிஞ்சும் இயல்பு உண்டு. இதனால் தயிர் சீக்கிரம் புளிக்காது. ஆனால், இந்த முறை ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பலன் தரும். அவசரத் தேவைக்கு வெளியூர் செல்லும்போது தயிரைப் பாதுகாக்க இந்த முறை மிகவும் கைகொடுக்கும்.

வெப்பநிலை!

தயிர் தோய்க்கும்போது பாலின் வெப்பநிலை மிக முக்கியம். பால் அதிக சூடாகவோ அல்லது மிகவும் ஆறிய நிலையிலோ இருக்கக்கூடாது. கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது உறை மோர் சேர்ப்பதே சிறந்தது. அதேபோல, சீக்கிரம் தயிர் ஆகவேண்டும் என்று நினைத்து நிறைய உறை மோரை ஊற்றக்கூடாது. அரை லிட்டர் பாலுக்கு ஒரு சிறிய தேக்கரண்டி அளவு உறை ஊற்றினாலே போதுமானது. அளவுக்கு அதிகமான உறை மோர் சேர்த்தால், தயிர் உறையும் வேகம் அதிகரித்து, அது விரைவில் புளிப்புத் தன்மையை அடைந்துவிடும்.

ஆடை!

பால் உறைந்து தயிரான பிறகு, அதன் மேல் படியும் ஏடு அல்லது ஆடையை நீக்குவது அவசியம். இந்த ஆடைப் பகுதியில் தான் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், இது தயிரை விரைவில் கெட்டுப்போகச் செய்யும். எனவே, தயிர் செட்டான உடன் அதை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து மேலே உள்ள ஆடையை மட்டும் லாவகமாக எடுத்துவிடுவது தயிரின் ஆயுளை நீட்டிக்கும்.

இதையும் படியுங்கள்:
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பது தவறு! தாகத்திற்கு முன்பே குடிக்க வேண்டும்! ஏன்?
Curd

தண்ணீர்!

தயிரில் இருக்கும் தண்ணீர்தான் அது புளித்துப் போவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சினாலும், தயிராகும்போது இயற்கையாகவே நீர் பிரியும். அந்தத் தண்ணீரை முழுமையாக நீக்கிவிட்டால் இரண்டு வாரங்கள் வரை கூடத் தயிர் கெடாமல் இருக்கும். இதற்குச் சுத்தமான வெள்ளைத் துணியில் தயிரைக் கொட்டி, அதை ஒரு பந்து போலக் கட்டித் தொங்கவிட வேண்டும். 

அரைமணி நேரத்தில் நீர் முழுவதும் வடிந்துவிடும். இப்போது கிடைக்கும் க்ரீம் போன்ற கெட்டித் தயிரை காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், நீண்ட நாட்களுக்குப் புத்தம் புதியது போலவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ராஜாவின் விருப்பமும் நாராயணனின் வரமும்! - ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறிய சிறிய கதை...
Curd

இந்தச் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், கடையில் வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் சுவையான தயிரை நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com