அசைவத்தை மிஞ்சும் 'கறிப்பலா பிரியாணி'! - ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

'Curry Biryani' that surpasses non-vegetarian!
'Curry Biryani' that surpasses non-vegetarian!
Updated on

கறிப்பலாக் குழம்பு

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைக்க வேண்டியவை

உரித்த சின்ன வெங்காயம்  1 கப்

உரித்த பூண்டு 10 பல்

வரமிளகாய் 5 No

சோம்பு அரை டீஸ்பூன்

மிளகு சீரகம் ஒரு ஸ்பூன்

கசகசா கால் ஸ்பூன்

கொத்தமல்லி விதைகள் ½ கப்

பட்டை கிராம்பு ஏலக்காய்  தலா 2 Nos

பெரிய தக்காளி 2 No

கறிவேப்பிலை சிறிதளவு

இஞ்சி ஒரு சிறிய துண்டு

தேங்காய்த்துருவல் 1 கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்1 கப்

சிறு துண்டுகளாக நறுக்கிய இளம் கறி பலாக்காய் 1 கப்

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்

கறி மசாலா தூள் ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து  அரைத்துக்கொள்ளவும்

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதித்தகம் குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவும்

இந்த கறிப்பலாக் குழம்பு சூடான சாதத்துடனோ இட்லி சப்பாத்திக்கு வைத்து சாப்பிட ஏற்றது.

இதையும் படியுங்கள்:
ருசி அள்ளும் சோளே டிக்கி & பஞ்சு மென் வேர்க்கடலை கொழுக்கட்டை வீட்டிலேயே எளிய முறையில்!
'Curry Biryani' that surpasses non-vegetarian!

கறிப்பலா பிரியாணி

தேவையான பொருட்கள்:

பெரிய துண்டுகளாக நறுக்கிய கறிப்பலாக்காய்  2 கப்

நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 1 கப்

நறுக்கிய தக்காளி 1 கப்

பச்சை மிளகாய் 2 No

பொதினா கொத்துமல்லி இலை 1 கப்

கறிவேப்பிலை சிறிதளவு

சோம்பு ஒரு டீஸ்பூன்

அன்னாசிப்பூ 2 No

பட்டை கிராம்பு ஏலக்காய்  தலா 2 Nos

பிரிஞ்சி இலை 2 No.

இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தேங்காய்ப்பால் ஒரு கப்

பிரியாணி அரிசி 2 கப்

நெய் அரை கப்

உடைத்த முந்திரி

மஞ்சள் தூள்

பிரியாணி மசாலா தூள்  2ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

அரிசியை பத்து நிமிடம் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய்விட்டு உடைத்த முந்திரி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை அன்னாசி  பூ சேர்த்து பொரிய விடவும்

பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி பொதினா சேர்த்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் ஃபேவரைட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!
'Curry Biryani' that surpasses non-vegetarian!

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் கறிப்பலாவை சேர்த்து கிளறவும். அதனுடன் மஞ்சள் தூள் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் தேங்காய் பால் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியை போட்டு  தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும். குக்கரைத் திறந்து நெய்விட்டு  கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com