ருசி அள்ளும் சோளே டிக்கி & பஞ்சு மென் வேர்க்கடலை கொழுக்கட்டை வீட்டிலேயே எளிய முறையில்!

Healthy recipes
Healthy recipes in tamil
Published on

சோளே டிக்கி செய்ய தேவையான பொருட்கள்:

சோளே- ஒரு கப்

ஓட்ஸ்- கால் கப்

மிளகாய்த் தூள், சாட் மசாலா தலா- ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் -அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் பொடியாக அரிந்தது -2

கேரட் துருவல்- கால் கப்

தயிர்- இரண்டு டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை பொடியாக அரிந்தது- ஒரு டேபிள் ஸ்பூன்

ப்ரெட் க்ரம்ஸ் -அரை கப்

உப்பு -ருசிக்கேற்ப

செய்முறை:

சோளையை நன்றாக ஊறவைத்து, வேகவைத்து, தண்ணீரை வடித்து மிக்ஸியில் பொடித்து வைக்கவும். ஓட்ஸை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இதில் சேர்க்கவும். பின்னர் உப்பு, தயிர், கேரட் துருவல், மிளகாய் தூள், மிளகாய், பெருங்காயம், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பிறகு விருப்பப்பட்ட வடிவில் மாவை சிறிது சிறிதாக எடுத்து கட்லெட் போல தட்டி பிரட் கிரம்ஸில் புரட்டி தவாவில் போட்டு, ஓரங்களில் எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். அப்படியே சாப்பிடலாம். சத்து நிறைந்தது. ருசி அள்ளும்.

வேர்க்கடலை கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி மாவு -ஒரு கப்

வேர்க்கடலை வறுத்து ஒன்று இரண்டாக உடைத்தது - முக்கால் கப்

வெல்லத்துருவல்- முக்கால் கப்

செய்முறை:

பச்சரிசி மாவை ஒரு துணியில் முடிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அந்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

உடைத்த வேர்க்கடலையுடன் வெல்லத்துருவலை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பூரணம் ரெடி.

இதையும் படியுங்கள்:
மூட்டு வலி, இடுப்பு வலியா? வாரத்துல 2 நாள் இத சாப்பிடுங்க, குதிரை பலம் கிடைக்கும்!
Healthy recipes

பதப்படுத்திய பச்சரிசி மாவில் சொப்பு செய்து அதில் இந்த பூரணத்தை வைத்து மூடி எல்லாவற்றையும் இதேபோல் கொழுக்கட்டைகள் பிடித்து வைக்கவும். பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அந்தத் தட்டுகளின் குட்டிக் குட்டி குழிகளில் எண்ணெய் தேய்த்து பிடித்த கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வித்தியாசமான பூரணத்தில் எளிதில் செய்யக்கூடிய அசத்தலான கொழுக்கட்டை இது. மாவினை நன்றாக அவித்து செய்வதால் கொழுக்கட்டை பஞ்சு மாதிரி இருக்கும். நீங்களும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com