
பொரி கட்லெட்:
பொரி 2 கப்
பொட்டுக்கடலை மாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
உருளைக்கிழங்கு
வேக வைத்தது 1
கேரட் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
பொரியை தண்ணீர் விட்டு கழுவி பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் வேகவைத்து, தோல் நீக்கி மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், இஞ்சி பூண்டு விழுது, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, காரப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலந்து விருப்பமான வடிவில் வடை போன்றோ, இதய வடிவிலோ தட்டி வைக்கவும். தட்டிய கட்லெட்டுகளை பிரெட் தூளில் இரண்டு பக்கமும் நன்கு புரட்டி எடுத்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை நான்கு ஐந்தாக பரப்பி வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக விடவும். இரண்டு பக்கமும் நன்கு மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்துவிட சுவையான பொரி கட்லெட் தயார். தக்காளி சாஸுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
பலாக்கொட்டை கட்லெட்:
பலாக்கொட்டை 1/4 கிலோ வெங்காயம் 1
கேரட் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
சோள மாவு 4 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் 1 மூடி
கொத்தமல்லி சிறிது
பலாக்கொட்டைகளை நன்கு அலம்பி தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து 4 விசில் விட்டு எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த பலாக்கொட்டை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு, கரம் மசாலா, மிளகாய் தூள், சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவும். விருப்பமான வடிவில் கட்லெட்களாகச் செய்து பிரட் தூளில் இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கலாம் அல்லது தோசை கல்லில் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்கு சிவக்க எடுக்க மிகவும் ருசியான பலாக்கொட்டை கட்லெட் தயார்.
உப்புமா கட்லெட்:
உப்புமா 1 கப்
சீஸ் 1/4 கப்
வெங்காயம் 1
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தனியாத் தூள் 1 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது நீங்க ரவை உப்புமாவை குழந்தைகள் விரும்பும் வகையில் கட்லெட் செய்து கொடுக்கலாம் ஒரு பாத்திரத்தில் மீண்டும் துருவிய சீஸ் சேர்த்து பிசையவும் அத்துடன் மஞ்சள் தூள் தனியா தூள் கார பொடி கரம் மசாலா பொடியாக நறுக்கிய கொத்தமல்லி வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கட்லெட் வடிவில் செய்து தட்டில் அடுக்கவும் இதனை பிரெட் தூளில் இருபுறமும் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்க மிகவும் ருசியான கட்லெட் தயார் தக்காளி சாஸ் உடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.