சுவையான அல்வா ரெசிபிகள்: ப்ரெட், பிஸ்கட், மில்க் மற்றும் ரெடிமேட் கோதுமை அல்வா எப்படி செய்வது?

Delicious Alva Recipes
Halwa recipes
Published on

நெய் மணத்துடன் வாயில் வழுக்கும் அல்வா என்றால் அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் கொஞ்சம் கவனம் மட்டும் தேவை. பதம் தப்பிவிட்டால் முறுக்கு மாதிரி ஆகிவிடும் என்பதால் பலரும்  கடைகளில் தேவைப்படும்போது வாங்கிக்கொள்கின்றனர். இதோ இங்கு வீட்டில் இருப்பதைக் கொண்டு எளிதாக செய்ய சில அல்வா வகைகள்.

பிரட் அல்வா
தேவை:

பிரட் ஸ்லைஸ்- 6
சர்க்கரை  -1/2 கப்
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை -10
ஆரஞ்சு புட் கலர் – சிட்டிகை

செய்முறை:
ஒரு கடாயில் சர்க்கரை போட்டு கால் கப் நீரூற்றி தீயில் வைத்து கிளறி முதல் பாகு தயார் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிய பிரட் துண்டுகளை அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

பிரெட் துண்டுகள் சர்க்கரை பாகில்  ஊறிய பிறகு அவற்றை நன்றாக மசித்துக்கொள்ளவும். இதில் பால் மற்றும் கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பால் சுண்டும்வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். வைக்கவும். கலவை கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய் சேர்க்கலாம். இறக்கும் முன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்துக் கிளறி கலவை கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து எடுத்து கிண்ணத்தில் வைத்து பரிமாறவும். ஏலக்காய் சேர்ப்பது அவரவர் சாய்ஸ். சுவையான ப்ரெட் அல்வா ரெடி.

பிஸ்கட் அல்வா
தேவை:

மேரி பிஸ்கட்டுகள் - நடுத்தர சைஸ் 3 பாக்கெட்
கோதுமை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 1/2 கப்
பால் - 3 கப்
சர்க்கரை - 1/2 கப்
முந்திரிப் பருப்பு - 10.
பாதாம் பருப்பு - சிறிது அலங்கரிக்க

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் பலாக்கொட்டை கறி செய்யலாம் வாங்க!
Delicious Alva Recipes

செய்முறை:
மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு அடிகனமான கடாயில் கால் கப் நெய் ஊற்றி கோதுமை மாவை நெய்யில் சேர்த்து மாவு பொன்னிறமாகும் மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கோதுமை மாவு பொன்னிறமானதும் பொடித்த மேரி பிஸ்கட் தூள் சேர்த்துக் கிளறவும். மாவும், பிஸ்கட்டும் கலந்ததும் சிறிது சிறிதாக பால் சேர்த்துக் கிளறவும்.

கோதுமை மாவு, பிஸ்கட் கலவை பாலுடன் நன்கு கலந்ததும் அரை கப் சர்க்கரை சேர்த்துக்கிளறவும். நடு நடுவே தேவையான  நெய் சேர்த்துக் கிளறவும். கிண்டும்போதே நெய் முழுவதும் அல்வாவில் சேர்ந்து ஒட்டாமல் வரும். இந்த நேரத்தில் வறுத்த முந்திரிப் பருப்புகளை சேர்த்து அல்வா கடாயில் ஒட்டாமல் வரும்போது இறக்கி ஆறியதும் மெலிதாக சீவிய பாதாம் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.

மில்க் அல்வா
தேவை:

ஃபுல் க்ரீம் மில்க் - 1 லிட்டர்
சர்க்கரை- 2 சிறிய கப்
நெய் - 5 அல்லது 6 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 10

செய்முறை:
பாலை தண்ணீர் சேர்க்காமல் அடி கணமான கடாயில் ஊற்றி கொதிக்கவிடவும். பால் பாதியாக சுண்டியதும் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். பால் நீர் வற்றி கெட்டியானதும் பொடித்த  ஏலக்காய்த்தூள் சேர்த்து தேவையான நெய் விட்டு நன்றாகக்கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இறக்கி ஆற விட்டு பரிமாறவும்.

பால் சுண்ட நேரம் பிடிக்கும் என்பதால் மிதமான தீயில் வைத்து கிளறுவது முக்கியம். இதில் விரும்பினால் கன்டெஸ்டன்ட் மில்க் சேர்த்தும் செய்யலாம். ஆனால் அதில் ஏற்கனவே சர்க்கரை இருப்பதால் குறைவான சர்க்கரை போதும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மூன்று கொடிய விஷ உணவுகள் பற்றித் தெரியுமா?
Delicious Alva Recipes

ரெடிமேட் கோதுமை அல்வா
தேவை:

கோதுமை மாவு -11/2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய்- 3: டேபிள்ஸ்பூன்
முந்திரி - சிறிது
திராட்சை – சிறிது

முதலில் கோதுமை மாவை சலித்து இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி நெய் உருக்கியதும் கரைத்து வைத்த கோதுமை கலவையை ஊற்றி 5 நிமிடங்கள் கிளறவும். இப்போது  ஓர் அளவிற்க்கு அல்வா பதம் வந்திருக்கும். இதில் கேசரி கலர் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும்  நெய் சேர்த்து கிளறவும். பிறகு அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி இறக்கவும். ரெடிமேட்  கோதுமை அல்வா தயார். விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com