
பிரட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:
பிரட்- 5 துண்டுகள்
பெரிய வெங்காயம்- ஒன்று நீள வாக்கில் அரிந்தது
கேரட்- ஒன்று நீள வாக்கில் அரிந்தது
முட்டைக்கோஸ் பொடியாக நீளவாக்கில் அரிந்தது- ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை ,கொத்தமல்லி பொடியாக அரிந்தது -ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் கீறியது- இரண்டு
மிளகாய் தூள்- ஒரு டீஸ்பூன்
கடலை மாவு -இரண்டு டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா- கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும், இதனுடன் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொதிக்கும் எண்ணெயில் பக்கோடாக்களாக போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேர ஸ்நாக்ஸ் இது. டீயுடன் சுவையாக கொறிக்கலாம்.
கோதுமை மேத்தி பக்கோடா:
செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- ஒரு கப்
ரவை -ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு- ஒரு டேபிள் ஸ்பூன்
உருளைக் கிழங்கு -ஒன்று துருவியது
பெரிய வெங்காயம் -பொடியாக அரிந்தது ஒன்று
பீன்ஸ் பொடியாக அரிந்தது- ஒரு கைப்பிடி
இஞ்சி துருவல்- ஒரு டீஸ்பூன்
பச்ச மிளகாய் பொடியாக அரிந்தது- 4
வெந்தயக்கீரை பொடியாக அரிந்தது -ஒரு கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் தெளித்து நன்றாக பிசைந்து, கொதிக்கும் எண்ணையில் போட்டு பக்கோடா களாக்க பொரித்து எடுக்கவும். கம கம வாசனையில் நாவிற்கு சுவையான பக்கோடா ரெடி. கொறிப்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.