

மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் வெத்தலவள்ளி கிழங்கு. இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. வெத்தலவள்ளி கிழங்கு கூட்டு.
தேவையான பொருட்கள்
வெத்தலவள்ளி கிழங்கு _ ¼ கிலோ
தக்காளி _ 1
வெள்ளை மொச்சை _ 100 கிராம்
சின்னவெங்காயம் _ 10
மிளகாய்தூள் _ 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் _1/2 டீஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
தேங்காய்த்துருவல் _ ¼ கப்
செய்முறை
வெத்தல வள்ளி கிழங்கின் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் தோல் நீக்கிய மொச்சை பயறு வள்ளிக்கிழங்கு இத்துடன் தக்காளி வெங்காயம் மிளகாய்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்க்கவும். இக்கலவையில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 5 விசில் வரை வேக வைக்கவும். பின்னர் தேங்காய்த்துருவல் சேர்த்து தாளித்துக் கொட்டவும் சுவையான வெத்தலவள்ளி கிழங்கு கூட்டு ரெடி.
வெண்டைக்காய் மண்டி
தேவையானவை
வெண்டைக்காய் – ¼ கிலோ
வேக வைத்த கொண்டைக்கடலை - 1 கப், அரிசி களைந்த நீர் – 2 கப்
புளி – எலுமிச்சையளவில் பாதி
பச்சை மிளகாய் – 3
சின்னவெங்காயம் – 15
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு பல் – 10
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
கத்திரிக்காய் திரக்கல்
தேவையானவை;
கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க
பூண்டு – 5 பல், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் - ¼ கப், கசகசா, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க
சோம்பு, சீரகம் – தலா ¼ டீஸ்பூன்.
செய்முறை
கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
பாலக், பருப்பு தக்காளி பொரியல்
தேவையானவை
பாலக்கீரை _ ஒரு கட்டு
துவரம்பருப்பு _ ¼ டம்ளர்
தாளிக்க
எண்ணை + நெய் _ 2 தேக்கரண்டி
கடுகு _1/4 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் _ 3
சின்னவெஙகாயம் _ 10 பத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் _1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை _சிறிது
உப்பு _ தேவைக்கு
தக்காளி _ 1
செய்முறை
கீரையை பொடியாக நறுக்கி மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும். பிறகு கீரையுடன் பருப்பு, மஞ்சள்தூள் சிறிது நெய் ஊற்றி வேகவைத்து மசிக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி மசித்தபருப்பை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். காரமில்லாத சுவையான பாலக் தக்காளி பொரியல் ரெடி.