இன்றைக்கு சுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெசிபிஸ் அவல் அப்பம் மற்றும் அவல் வடை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
அவல் அப்பம் செய்ய தேவையான பொருட்கள்;
அவல்-1/2 கப்.
வெல்லம்-1/2 கப்.
அரிசி மாவு-1/4 கப்.
ஏலக்காய்-1/2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-2 தேக்கரண்டி.
வாழைப்பழம்-1/4கப்.
வெள்ளை எள்-1 தேக்கரண்டி.
நெய்-தேவையான அளவு.
அவல் அப்பம் செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பாத்திரத்தில் ½ கப் அவலை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றி மிருதுவாகும் வரை ஊற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் ½ கப் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும். இப்போது இத்துடன் ¼ கப் அரிசி மாவு, வடிகட்டிய வெல்லம், ஏலக்காய் தூள் ½ தேக்கரண்டி, துருவிய தேங்காய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு மிக்ஸியில் சேர்த்து அத்துடன் ¼ கப் வாழைப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதில் 1 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பணியாரப் பாத்திரத்தில் தாராளமாக நெய் விட்டு மாவை ஊற்றி நன்றாக இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான அவல் அப்பம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
அவல் வடை செய்ய தேவையான பொருட்கள்;
அவல்- ½ கப்.
அரிசி மாவு-2 தேக்கரண்டி.
கடலை மாவு-2 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி,கருவேப்பிலை- சிறிதளவு.
வெங்காயம்-1
தயிர்-1/4கப்.
இஞ்சிப் பொடி-சிறிதளவு.
பெருங்காயதத்தூள்-சிறிதளவு.
முட்டை கோஸ்-1/4கப்
எண்ணெய்- தேவையானஅளவு.
அவல் வடை செய்முறை விளக்கம்;
முதலில் ½ கப் அவலை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்துக்கொண்டு அதில் சுடுதண்ணீர் சேர்த்து நன்றாக மிருதுவாகும் வரை ஊறவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அவலை நன்றாக பிசைந்துக்கொண்டு 2 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி கடலை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கெட்டி தயிர் ¼ கப், இஞ்சிப் பொடி சிளிதளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, முட்டை கோஸ் ¼ கப் சேர்த்து நன்றாக பிசைந்துவிட்டு கையில் எண்ணெய் தடவி வடையை தயார் செய்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்றாக கொதித்ததும் செய்து வைத்திருக்கும் வடையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான அவல் வடை தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.