சமையலறையில் நடந்த சின்ன சொதப்பல்... சூப்பர் ஹிட் அடித்த 8 உணவுப் பொருட்கள் இதோ!

delicious foods that were invented by accident
delicious foods that were invented by accident
Published on

நாம் இன்று மிகவும் விரும்பிச் சாப்பிடும் பல பிரபலமான உணவுகள், பல நூறு மணி நேர ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை கிடையாது. சமையலறையில் நடந்த சின்னச் சின்ன சொதப்பல்களால் தற்செயலாக உருவானவைதான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கின்றன. அப்படிப்பட்ட 8 சுவையான சைவ உணவுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்செயலாக உருவான சில உணவுகள்!

1. உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளேக்ஸ்! 

ஒருமுறை வாடிக்கையாளர் ஒருவர் உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் தடிமனாக இருப்பதாகக் கூறி திருப்பி அனுப்பியதால், கோபமடைந்த சமையல்காரர் அதனை மிகவும் மெலிதாக வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொடுத்தார். அதுதான் இன்று நாம் கொண்டாடும் சிப்ஸின் ஆரம்பம்.

அதேபோல, கோதுமை மற்றும் சோளத்தை வேகவைத்து அப்படியே மறந்துபோய் வெளியே வைத்துவிட்டார்கள் கெல்லாக் சகோதரர்கள். காய்ந்துபோன அதை ரோலரில் விட்டு நசுக்கியபோது உருவானதுதான் கார்ன் ஃப்ளேக்ஸ்.

2. சாக்லேட் சிப் குக்கீஸ் மற்றும் பிரவுனி!

குக்கீஸ் செய்யும்போது பேக்கர்ஸ் சாக்லேட் இல்லாததால், சாதாரண சாக்லேட் துண்டுகளை மாவில் கலந்தார் ஒரு பெண்மணி. அது உருகி மாவுடன் கலக்கும் என நினைத்த அவருக்கு, அது அப்படியே சிறு சிறு துண்டுகளாக வெந்து சுவையான சாக்லேட் சிப் குக்கீஸாக மாறியது பெரிய சர்ப்ரைஸ். இன்னொரு பக்கம், கேக் செய்யும்போது பேக்கிங் பவுடரை சேர்க்க மறந்ததால் கேக் உப்பாமல் தட்டையாக வெந்தது. அதுவே இன்றைய ஃபேவரைட் பிரவுனியாக மாறிப்போனது.

3. குச்சி ஐஸ் மற்றும் கோன் ஐஸ்கிரீம்!

பனிக்காலத்தில் குளிர்பானத்தில் ஒரு குச்சியைப் போட்டுவிட்டு இரவு முழுவதும் வெளியே மறந்து வைத்துவிட்டான் ஒரு சிறுவன். காலையில் அது உறைந்துபோய் முதல் குச்சி ஐஸாக மாறியது. அதேபோல, ஒரு திருவிழாவில் ஐஸ்கிரீம் கொடுக்க கப்கள் தீர்ந்துபோனதால், பக்கத்துக் கடையில் இருந்த வாஃபிள்ஸ்களை சுருட்டி அதனுள் ஐஸ்கிரீம் வைத்துக் கொடுத்தார்கள். இப்படித்தான் கோன் ஐஸ்கிரீம் பிறந்தது.

இதையும் படியுங்கள்:
சுத்தமான முறையில் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் தயாரிப்பது எப்படி?
delicious foods that were invented by accident

4. டோஃபு, மற்றும் காபி: சோயா பாலில் தற்செயலாக கடல் நீரின் உப்புத்தன்மை கலந்ததால் அது கெட்டியாகி டோஃபு உருவானது. இதைவிடப் பெரிய சுவாரஸ்யம் காபிதான். ஆடுகளை மேய்க்கச் சென்ற ஒருவன், சில பழங்களைச் சாப்பிட்ட ஆடுகள் மட்டும் மிகவும் சுறுசுறுப்பாக ஆட்டம் போடுவதைக் கவனித்தான். அந்தப் பழங்களைக் காய்ச்சிப் பார்த்தபோதுதான் உலகின் முதல் காபி உருவானது.

வாழ்க்கையில் நடக்கும் சில தவறுகளும் சொதப்பல் களும் கூட பல நேரங்களில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக மாறிவிடுகின்றன என்பதற்கு இந்த உணவுகளே ஒரு சிறந்த சாட்சி. பிளான் செய்து செய்திருந்தால் கூட இந்த அளவுக்கு இது ஒரு சூப்பர் ஹிட் ஆகியிருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த சுவாரஸ்யமான கதைகளை உங்கள் நண்பர்களுடனும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com