சுவை மிகுந்த பிரஞ்சு மேக்ரூன் மற்றும் அமெரிக்க ஸ்டைல் சாக்லேட் பிரௌனி (Chocolate Brownie).

Delicious Foods
Chocolate Brownie
Published on

பிரஞ்சு மேக்ரூன்

தேவையான பொருட்கள்:

மாவுக்கு:

ஆல்மண்ட் மாவு – 1 கப்

பவுடர் சீனி – 1 ¾ கப்

முட்டை வெள்ளை – 3 (சுமார் 100 கிராம்)

சர்க்கரை – ¼ கப்

உப்பு – ஒரு சிறிய சிட்டிகை

நிறமூட்டும் பவுடர் – தேவைக்கேற்ப

பூரணத்துக்கு

வெண்ணெய் – 100 கிராம்

பவுடர் சீனி – 1 கப்

வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஆல்மண்ட் மாவும், பவுடர் சீனியும் நன்றாக சலிக்கவும். மென்மையான மாவாக இருக்கவேண்டும். ஒரு கிளீன் பவுலில் முட்டை வெள்ளையை, உப்புடன் சேர்த்து மின்மிக்சரில் அடிக்கவும். மெதுவாக சர்க்கரையைச் சேர்த்துக்கொண்டே மேகம் போல் (stiff peaks) வரும் வரை அடிக்கவும். அடித்த முட்டை வெள்ளையில் சலித்த ஆமண்ட் மற்றும் பவுடர் சீனி கலவையை மெதுவாக கலக்கவும். இது ribbon-like consistency ஆக (மாவு சளைக்காமல் மெதுவாக வீழ வேண்டும்) வந்துவிட்டால் போதும்.

விரும்பும் நிறம் சேர்க்கலாம். மாவை பைபிங் பேக் கொண்டு பட்டர்மெழுகு காகிதம் பதிக்கப்பட்ட தட்டு மீது சின்ன வட்டங்களாக போடவும். மேல் பகுதி மென்மையாக அமையும் வரை (சுமார் 30-60 நிமிடங்கள்) அறை வெப்பத்தில் உலரவிடவும். ஓவனை 150°C (300°F) வரை முன்னேட்டிப் போடவும். 12-15 நிமிடங்கள் வரை மேக்ரூன்கள் புட்டி போல் மேலே உடைக்காமல், கீழே “feet” என்ற கூம்பு உருவாகும் வரை வேகவைக்கவும். மேக்ரூன்கள் குளிர்ந்ததும், ஒரு பீஸின் பின்புறத்தில் பூரணம் சேர்த்து, மற்றொரு பீஸால் மூடி மெதுவாக அழுத்தவும்.

Refrigerate செய்து 24 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவை மேலும் மென்மையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சத்தான, சுவையான நான்கு வகை லட்டுகள்!
Delicious Foods

அமெரிக்கா ஸ்டைல் சாக்லேட் பிரௌனி (Chocolate Brownie)

தேவையான பொருட்கள்:

மென்மையான மைதாமாவு – ¾ கப்

நறுக்கிய டார்க் சாக்லேட் – 1 கப் (150 கிராம்)

வெண்ணெய் – ½ கப் (100 கிராம்)

சர்க்கரை – 1 கப் (200 கிராம்)

முட்டை – 2

கோகோ பவுடர் – 2 மேசைக்கரண்டி

உப்பு – ¼ மேசைக்கரண்டி

வெனிலா எசன்ஸ் – 1 மேசைக்கரண்டி

பீனட், வால் நட்ஸ், அல்லது சாக்லேட் சிப்ஸ் – விருப்பப்படி

செய்முறை:

ஓவனை 180°C (350°F) வரை முன்னிட்டு சூடாக்கவும். ஸ்கொயர் பேனில் பட்டர் அல்லது மெழுகு காகிதம் பூசிவைக்கவும். சாக்லேடுடன் வெண்ணெய் ஒன்றாக double boiler முறையில் அல்லது மைக்ரோவேவில் மெதுவாகக் கரைக்கவும். நன்கு கலந்து மென்மையாக்கி சிறிது குளிரவிடவும்.

மற்றொரு பவுலில் முட்டையும், சர்க்கரையும் சேர்த்து நன்கு அடிக்கவும் (light & fluffy ஆகவேண்டும்). அதில் வெனிலா எசன்ஸும் சேர்க்கவும். கரைத்த சாக்லேட் கலவையை இதில் சேர்த்து மெதுவாக கலக்கவும். மைதா, கோகோ பவுடர், உப்பு ஆகியவற்றை சலித்து சேர்க்கவும். கட்டியில்லாமல் மெதுவாக fold செய்து கலக்கவும். இதனுடன் நறுக்கிய வால் நட்ஸ், சாக்லேட் சிப்ஸ், அல்லது பீனட் சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுவையான ரூமாலி ரொட்டி தயாரிப்பது எப்படி?
Delicious Foods

தயாரான மாவை பெனில் ஊற்றி சமமாய் பரப்பவும். 180°C-ல் சுமார் 25-30 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். Toothpick போட்டு பார்த்தால், மையத்தில் சிறிது ஈரமாய் இருக்கும் – அதுவே உண்மையான சாக்லேட் brownie. பாத்திரத்தில் இருந்து எடுத்து முழுமையாக குளிரவிடவும். பிறகு சிறிய square துண்டுகளாக வெட்டவும்.

வெறும் தட்டில் பரிமாறலாம். சாக்லேட் சாஸ் அல்லது வெணிலா ஐஸ்கிரீம் கூட சேர்த்தால் சுவை அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com