
கடலைமாவு லட்டு
தேவை:
கடலை மாவு- 2 கப்
பசும் பால் - அரை கப்
நெய் - அரை கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு - 10
கற்கண்டு பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு கடலை மாவை வறுத்து, மணம் வரும் வரை கிளறவும். பசும்பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்தவாறே வறுக்கவும். மாவு பொல பொலவென்று ஆனதும், பொடித்த சர்க்கரை, பாதாம் பருப்பு, கற்கண்டு பொடி, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய் தொட்டுக்கொண்டு லட்டுகளாக பிடிக்கவும். சுவையான கடலை மாவு லட்டு தயார்.
பரங்கி விதை லட்டு
தேவை:
பரங்கி விதைகள் - 2 கப்
வறுத்த எள், கசகசா - தலா 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
ஒடித்த முந்திரிப் பருப்பு - கால் கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
பரங்கி விதைகளை தோல் நீக்கி, வாணலியில் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த எள், கசகசா, தேங்காய்த் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி அனைத்தையும் வறுத்த பரங்கி விதைகளுடன் கலக்கவும். சர்க்கரையை முதிர் பாகு செய்து, அதில் கலவையை போட்டுக்கிளறி, இறக்கி வைத்து, ஆறியதும் லட்டுகளாகப் பிடிக்கவும்.
பூசணிக்காய் லட்டு
தேவை:
பூசணிக்காய் துருவல் - 2 கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - அரை கப்
கிஸ்மிஸ் - 2 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 6
செய்முறை:
தோல், விதை நீக்கிய பூசணிக்காய் துருவலை சுத்தமான துணியில் பிழியவும். சர்க்கரையை பாகு காய்ச்சி அதில் பூசணி விழுது, நெய் கலந்து கிளறவும். பின்பு அதனுடன் ஏலக்காய் தூள், முந்திரி, கிஸ்மிஸ் எல்லாவற்றையும் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி வைத்து, லட்டுகள் பிடிக்கவும். கமகம பூசணிக்காய் லட்டு ரெடி.
ராகி லட்டு
தேவை:
கேழ்வரகு – 2 கப்
வெல்லத்தூள் - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகை சிறிது நெய் விட்டு அரைத்து பொடி செய்யவும். அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய் தூள், நெய் கலந்து லட்டுகள் பிடிக்கவும். இது சத்தான, சுவையான, செய்வதற்கு சுலபமான இனிப்பு பலகாரம் ஆகும்.