சுவையான பச்சைப்பயறு பணியாரம் - வெள்ளரிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி?

Delicious Green Lentil Paniyaram
Healthy foods
Published on

பச்சைப் பயிறு பணியாரம்

தேவையான பொருட்கள்:

பச்சைப்பயறு _1 கப்

உளுத்தம்பருப்பு _1/2 கப்

உப்பு _1 ஸ்பூன்

எண்ணெய் _2 ஸ்பூன்

கடுகு _ ¼  ஸ்பூன்

பெரிய வெங்காயம் _ 1

பச்சை மிளகாய் _1

இஞ்சி_ ஒருதுண்டு

கருவேப்பிலை _சிறிது

செய்முறை: பச்சைப்பயிறை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த பச்சைப்பயறை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைக்கவும். உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு விழுதாக அரைத்து பயறு மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து 4 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி சிறிது நேரம் ஆற வைக்கவும். பின்னர் இந்த வெங்காய கலவையை மாவில் போட்டு கலந்து வைக்கவும். பின்னர் பணியாரச் சட்டியை சூடு பண்ணி ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து குழியின் 3/4 பாகம் வரை மாவை ஊற்ற வேண்டும். ஒரு பக்கம் சிவந்து வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கலாம்.

மாலை நேரத்தில் தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சப்பாத்தி  

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் _ 1

கோதுமை மாவு _3 கப்

மிளகாய்_ 2

ஓமம் _ 1/4 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது _1 ஸ்பூன்

உப்பு _ தேவையானஅளவு

எண்ணெய் _ 2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
சமையல் ராணிகளுக்குப் பயன்படும் அசத்தலான சமையல் டிப்ஸ்...
Delicious Green Lentil Paniyaram

செய்முறை: வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதுடன், உப்பு, ஓமம் மற்றும் மாவு கலந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து விடவும். வெள்ளரிக்காயின் தண்ணீர் மாவு பிசைய போதுமானதாக இருக்கும். காயின் தண்ணீருக்கு ஏற்ப மாவு(2-3 கப்) கூட்டி குறைத்து சேர்க்கவும். இனி, 1ஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைவதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி 10 நிமிடங்களுக்கு நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு சற்று தொய்வாகத்தான் இருக்கும். எண்ணெய் அதிகமாக தேவைப்படாது.

பிசைந்த மாவு காயாமல் இருக்க, லேசாக எண்ணெய் தடவி மூடி 1 மணி நேரம் ஊறவிடவும். பின் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, உருண்டைகளின் மேல் மாவு தூவி,வட்டங்களாக விரிக்கவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும்,விரித்த வட்டங்களை ஒவ்வொன்றாக சேர்த்து தேவைக்கு எண்ணெய் சேர்த்து இரு புறங்களிலும் வேகவைத்து எடுக்கவும். சுவையான, வெள்ளரிக்காய் மணத்துடன் சப்பாத்தி ரெடி. எல்லா குருமா, கிரேவிகளும் பொருத்தமாக இருக்கும்.

சிம்பிள் பீட்சா தோசை

தேவையான பொருட்கள்:

தோசை மாவு _ 2 கப்

காரட்துருவல்_ ½ கப்

குடைமிளகாய்_ 1/2 (நறுக்கியது)

இதையும் படியுங்கள்:
பர்மா பானம் மோலேசா: வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
Delicious Green Lentil Paniyaram

செய்முறை:

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஊத்தப்பம் மாதிரி மாவை ஊற்றி துருவிய காரட், நறுக்கிய குடைமிளகாய் தூவவும். குழந்தைகளுக்கு நடுவில் சீஸ் தூவலாம். பெரியவர்களுக்கு வெங்காயம் நறுக்கிக் போட்டு சேர்க்கலாம். சுற்றி எண்ணெய்விட்டு இட்லி தட்டு மூடியால் மூடி வைத்தால் தோசையை திருப்பிப் போட வேண்டாம்.அப்படியே எடுத்து சட்னி வைத்து சாப்பிடலாம். சிம்பிள் பீட்ஸா தோசை ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com