சுவையான மாங்காய் சட்னி செய்முறை!

Delicious Mango Chutney Recipe!
Delicious Mango Chutney Recipe!

நீங்கள் இதுவரை புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி என பல விதமான சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் மாங்காயை வைத்து சட்னி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் மாங்காய் வைத்து முற்றிலும் புதுமையான சட்னி நாம் செய்ய முடியும்.

பொதுவாகவே மாங்காயை வைத்து பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம், சாம்பார் போன்றவைதான் அதிகமாக செய்வார்கள். ஆனால் மாங்காயை பயன்படுத்தி செய்யும் சட்னி, வழக்கமாக நாம் செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1

வரமிளகாய் - 5

வெல்லம் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன் 

தேங்காய் துருவல் - ½  கப்

இஞ்சி - 1 இன்ச்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாங்காயை நன்கு கழுவி தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயையும் துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வரமிளகாய், மாங்காய், இஞ்சி, உப்பு, வெல்லம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொண்டு, தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இவைதான்!
Delicious Mango Chutney Recipe!

அடுத்ததாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இறுதியில் தாளித்ததை சட்னியில் சேர்த்து கலக்கினால், அட்டகாசமான சுவையில் மாங்காய் சட்னி ரெடி. 

இதை ஒருமுறையாவது கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள். சிலர் இதை புளிக்கும் என நினைக்கலாம். ஆனால் அதிகப்படியான புளிப்பு சுவை இல்லாமல் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com