
இனி விடுமுறை தினங்கள் அதிகம் வரப்போகிறது. அந்த நேரங்களில் வீட்டிலேயே இருக்கும் பிள்ளைகள் ஏதேனும் செய்து தரச்சொல்லி நச்சரிப்பார்கள். அவர்களுக்காக சத்துகள் நிறைந்த மூங்தால் எனப்படும் பாசிப்பருப்பு வைத்து இங்கு சில ரெசிபிகள் பார்க்கலாம்.
மூங் தால் வித் பனீர் தோசை
தேவை:
பாசிப்பருப்பு - 2 கப்
கெட்டி தயிர் - 1/2 கப்
பனீர் - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு – தேவைக்கு
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுத்து ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து தயிர் மற்றும் சிறிது தண்ணீர் கலந்து அரைக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுதுடன் தந்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து 5 நிமிடம் அப்படியே வைத்திருந்து சூடான தோசை தவாவில் தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு சிவக்க எடுக்கவும். இந்த பாசிப்பருப்பு தோசை பன்னீருடன் கலந்து ருசியாக இருப்பதால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
மூங் தால் ஸ்டஃப்ட் பூரி
தேவை:
பாசிப்பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறு துண்டு
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கோதுமை மாவு - 11/2 கப்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
ரவை - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பூரணத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களான ஊறவைத்த பாசிப்பருப்பு மிளகாய் சீவிய இஞ்சி உப்பு கரம் மசாலா சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமைமாவை சலித்து அதனுடன் ரவை, உப்பு, ஓமம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இறுக்கமாக மாவு பிசையவும். 10 நிமிடங்கள் கழித்து கொஞ்சம் மாவை எடுத்து சிறிய செப்பு போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி கொஞ்சம் தடிமனான பூரியாக திரட்டி கொள்ளவும். அடுப்பில் இருக்கும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பூரிகளை போட்டு பொரித்து எடுத்தால் சத்தான சுவையான சைட் டிஷ் எதுவுமே தேவையில்லாத மூங்தால் ஸ்டஃப்டு பூரி ரெடி.
மூங் தால் உசிலி ரோல்ஸ்
தேவை:
தோசை மாவு - தேவைக்கு நல்லெண்ணெய் - தேவைக்கு
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - தேவையான அளவு(தக்காளி முட்டைகோஸ் வெள்ளரிக்காய் கேரட்) கொத்தமல்லித்தழை - சிறிது
ஓமப்பொடி - சிறிது
பாசிப்பருப்பு- 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
சிவப்பு மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஊறிய கடலைப் பருப்பு பாசிப்பருப்பை மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கடாயில் சிறிது எண்ணெய்விட்டு அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை கிளறிக் கிளறி எடுத்து வைக்கவும். உசிலி ரெடி.
இப்போது மாவை தவாவில் சற்று கனமான தோசைகளாக சுட்டு அதன் மேல் உசிலி பரப்பி மேலே காய்கறிகள் ஓமப்பொடி நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். பிள்ளைகள் உச் கொட்டி சாப்பிடுவார்கள்.