நாவூர வைக்கும் முருங்கைக்கீரை தொக்கு- காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை ரெசிபிஸ்!

Cauliflower Pepper Fry Recipe
Murungai keerai recipe
Published on

ன்றைக்கு டேஸ்டியான முருங்கைக்கீரை தொக்கு மற்றும் காலிஃபிளவர் பெப்பர் பிரை ரெசிபிஸை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

முருங்கைக்கீரை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்.

பொடி செய்ய,

மல்லி விதை- 2 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

பேஸ்ட் செய்ய,

நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

முருங்கைக்கீரை-1 கப்.

புளி-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

முருங்கைக்கீரை தொக்கு செய்முறை விளக்கம்.

முதலில் ஃபேனில் மல்லி விதை 2 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும். இதை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து அதில் வரமிளகாய்  5, முருங்கைக்கீரை 1 கப், புளி சிறிதளவு சேர்த்து கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது மறுபடியும் கடாயில் தாராளமாக நல்லெண்ணெய் விட்டு அதில் அரைத்த முருங்கை இலை பேஸ்ட்டை சேர்த்து நன்றாக தொக்காக வரும் வரை கிண்டவும். இதில் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து நன்றாக தொக்கு பதம் வந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், செம டேஸ்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

காலிஃபிளவர் பெப்பர் பிரை செய்ய தேவையான பொருட்கள்.

காலிஃபிளவர்-2 கப்.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

உப்பு-சிறிதளவு.

எண்ணெய்-4 தேக்கரண்டி.

பச்சை மிளகாய்-1

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-3

வெங்காயம்-1 கப்.

கருவேப்பிலை-1 கொத்து.

இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி.

தக்காளி-1

உப்பு-தேவையான அளவு.

மல்லி தூள்-1 தேக்கரண்டி.

மிளகு தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

காலிஃபிளவர் பெப்பர் பிரை செய்ய தேவையான பொருட்கள்.

முதலில் 2 கப் அளவிற்கு காலிஃபிளவரை எடுத்து நன்றாக அலசி விட்டு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் 4 தேக்கரண்டி விட்டு அதில் வேக வைத்திருக்கும் காலிஃபிளவரை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பால் திரிஞ்சி போச்சா? அதை வைச்சு என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?
Cauliflower Pepper Fry Recipe

அதே எண்ணெய்யில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு 3, பொடியாக நறுக்கிய வெங்காயம்1 கப், கருவேப்பிலை 1 கொத்து சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி 1, தேவையான அளவு உப்பு, மல்லி தூள் 1 தேக்கரண்டி, மிளகுதூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

இப்போது இதில் சிறிது தண்ணீர் விட்டு  வேகவிடவும். நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது வறுத்து வைத்திருந்த காலிஃபிளவரை சேர்த்து கிண்டி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காலிஃபிளவர் பெப்பர் பிரை தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சைட் டிஷ்ஷாக சேர்த்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com