
பொதுவாக பலாக்காயில் ஸப்ஜி செய்து சாப்பிடுவோம், வாங்க இன்றைக்கு வித்தியாசமாக பிரியாணி செய்யலாம்;
செய்முறை:
முதலில் 250g பலாக்காயை தோல் சீவி வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளுடன் தேவையான உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேகவைக்கவும்.
பிறகு வெந்த காயை எடுத்து விட்டு அதே குக்கரில் நான்கு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றவும். காய்ந்த பிறகு பட்டை, இலவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலையை போடவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு வதக்கவும். ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி தழை மற்றும் புதினா இலை இவை நான்கையும் சேர்த்து அறைத்து பேஸ்ட் செய்து இத்துடன் அதையும் போட்டு வதக்கவும்.
மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பிரியாணி மசாலாவையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு ஒரு சிறிய கப் அளவிறகு தயிரை எடுத்துகொண்டு அதை நனறாக அடித்து கலக்கவும். இப்போது வேகவைத்துள்ள பலாக்காயை சேர்க்கவும். ஏற்கனவே உப்பு போட்டிருப்பதால் மசாலாவிற்கும் அரிசிக்கும் தேவையான உப்பை மட்டும் போடவும். 250g பலாககாய்க்கு 200g அரிசி சேர்த்தால் சரியாக இருக்கும்.
அரிசியை சேரத்து நன்றாக கிளறி தண்ணீர் விடவும். பாசுமதி அரிசியாக இருந்தால் அரிசி மூழ்கும்வரை தண்ணீர் விட்டால் போதும். தினம் செய்யும் சாதாரண அரிசியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் இரண்டு விசில் வந்தால் போதும். ஆறிய பிறகு நன்றாக கிளறி ரைய்தாவுடன் பரிமாறவும்.
அடுத்தபடியாக வாழைக்காய் கோஃப்தா ரெசிபியை பார்க்கலாம்:
Gravy masala:
இரண்டு தக்காளி, இரண்டு வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, நான்கைந்து பூணடு பல், ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு இலவங்கம், ஏலக்காய், சிறிதளவு தனியா(coriander seeds) சீரகம் இவை எல்லாவற்றையும் வாணலியில் (சிறிதளவு எண்ணெய் ஊற்றி) போட்டு வதக்கி ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். Gravy masala ready.
வாழைக்காய் பக்கோடா:
இரண்டு வாழைக்காய் மற்றும் ஒரு உருளைக்கிழங்கை அப்படியே குக்கரில் போட்டு வேகவைக்கவும். ஆறிய பிறகு தோலை உரித்து மசிக்கவும். அத்துடன் கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய சிறிதளவு கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து கலக்கவும். உருண்டை பிடிக்கக் கூடிய பதத்தில் இருக்க வேண்டும். உருண்டை சரியாக வரவில்லை என்றால் இன்னும் சிறிது கடலை மாவை சேர்க்கவும். சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து அவற்றை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். மிகவும் crispy ஆக பொறிக்கக் கூடாது.
கோஃப்தா:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு வதக்கவும். மசாலாவிற்குத் தேவையான உப்பையும போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்கவும். Gravy சிறிதளவு thick ஆன பிறகு வாழைக்காய் பக்கோடாவை போட்டு sim-ல் ஐந்து நிமிடத்திற்கு வைத்து அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் வைத்தால் கோஃப்தா உடைந்து விடும். மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவவும். விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு condensed milk creamஐயும் மேலே விட்டு சேர்க்கலாம்.
குறிப்பு: சாப்பிடுவதற்கு பத்து நிமிடம் முன்னால்தான் இதை செய்ய வேண்டும். முதலிலேயே செய்துவிட்டால் கோஃப்தா gravy முழுவதையும ஈர்த்துவிடும். நீங்கள் பக்கோடாவையும் gravy masalவையும் முதலிலேயே ready செய்துவிட்டு சாப்பிடுவதற்கு முன்னால் gravyஐ வதக்கி தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு கோஃப்தாவை போட்டுக்கொள்ளலாம்.