இன்றைக்கு சுவையான வேர்க்கடலை சாதம் மற்றும் ஆரோக்கியமான முருங்கைப்பூ முட்டை பொரியல் எப்படி சுலபமாக செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி-1 ½ கப்.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
தக்காளி-1
வெங்காயம்-1
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
வேர்க்கடலை-1கப்.
மிளகாய்தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் 1 ½ கப் அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். இப்போது குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொண்டு கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை சிறிதளவு, சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா ¼ தேக்கரண்டி சேர்த்து கிளறிவிட்டு வேர்க்கடலை 1 கப் சேர்த்து கிண்டிவிடவும். இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து இதற்கு தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி சிறிது மேலே தூவி மூடிப்போட்டு குக்கரில் மூன்று விசில் விட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான வேர்க்கடலை சாதம் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.
முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய்-2 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
வரமிளகாய்-2
வெங்காயம்-1
முருங்கைப்பூ-2 கப்.
முட்டை-2
மிளகுத்தூள்-1 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுந்து சேர்த்து பொரிந்ததும் அத்துடன் சீரகம் 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது 2 கப் முருங்கைப்பூவையும் இத்துடன் சேர்த்து வதக்கவும். முருங்கைப்பூ நன்றாக சுண்டி வந்ததும் முட்டை 2 உடைத்து ஊற்றிக்கொள்ளவும். இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக சுண்ட கிளறிவிட்டு இறக்கினால் முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார். நீங்களும் இந்த ஆரோக்கியமான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.