
இன்றைக்கு சுவையான சைட்டிஷ் ரெசிபிஸ், உருளைக்கிழங்கு ஜீரா பொரியல் மற்றும் மசாலா சுண்டல் சிம்பிளா சட்டுபுட்டுனு எப்படி செய்வதுனு பார்ப்போம்.
உருளைக்கிழங்கு ஜீரா பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு-1/2 கிலோ.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
பூண்டு-5
பச்சை மிளகாய்-2
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
தூள் உப்பு-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
உருளைக்கிழங்கு ஜீரா பொரியல் செய்முறை விளக்கம்.
முதலில் ½ கிலோ உருளைக்கிழங்கை வேக வைத்து நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு ½ தேக்கரண்டி சீரகம், 5 (நறுக்கிய) பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் 2, மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, மல்லித்தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி நன்றாக கலந்துவிட்டு வேகவைத்த உருளையை சேர்த்து மசாலாவுடன் கலந்துவிடவும்.
இப்போது இதில் 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். கடைசியாக, கொத்தமல்லி சிறிதளவு தூவி 2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஜீரா பொரியல் தயார். இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அல்டிமேட்டாக இருக்கும்.
மசாலா சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை கடலை-1/4 கிலோ.
கல் உப்பு-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1 தேக்கரண்டி.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
எண்ணெய்-தேவையான அளவு.
பூண்டு-3.
சோளமாவு-1 ½ தேக்கரண்டி.
கடலை மாவு-1 தேக்கரண்டி.
மசாலா சுண்டல் செய்முறை விளக்கம்.
முதலில் ¼ கிலோ வெள்ளை கடலை இரவு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து இதை குக்கரில் சேர்த்து தண்ணீர் விட்டு 1 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மசாலாவை பேஸ்டாக கரைத்துக் கொள்ளவும். இதில் வேகவைத்த சுண்டலை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் 1 ½ தேக்கரண்டி சோளமாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி 3 பூண்டை தட்டி சேர்த்துவிட்டு எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக மொறுமொறுப்பாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மசாலா சுண்டல் தயார்.