சுவையான புலாவ் ரெசிபிகள்: உங்கள் டேஸ்ட்டை மாற்றும்!

Delicious Pulao Recipes
Pulao Recipes
Published on

ராஜ்மா புலாவ்

தேவை:

கிட்னி பீன்ஸ் -100 கிராம்

பாஸ்மதி அரிசி - 250 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய் - 1

புதினா - 10 இலை

மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

மல்லிதூள் - 1/2 ஸ்பூன்

மிளகாய்வற்றல் பொடி - 1/2 ஸ்பூன்

பட்டை - சிறிது 

கிராம்பு - 2

ஏல்க்காய் - 2

பிரிஞ்சி இலை - 1

இஞ்சி - சிறிது 

பூண்டு - 4 பல்

உப்பு - தேவைக்கு

நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:

கிட்னி பீன்ஸ் வேகவைத்துக்கொள்ளவும். குக்கரில் நெய்ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி, மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா சேர்த்து அரைத்துக் கொளளவும். அரைத்த விழுதை வெங்காயத்துடன் பச்சை வாடை போகும்வரை சேர்த்து வதக்கவும். மஞ்சள், மல்லி வத்தல், உப்பு தூள்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்

பின் கிட்னி பீன்ஸ், கழுவிய அரிசியையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் விட்டு வேகவிடவும்.

கிட்னி பீன்ஸ் புலாவ் தயார்.

                     ******

ஸ்வீட் கார்ன் புலாவ்

தேவை:

பாஸ்மதி அரிசி – 1 கப்

ஸ்வீட் கார்ன் – 1 கப்

வெங்காயம் – 2

தக்காளி – 1

பச்சைமிளகாய் – 1

மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி

பிரியாணி மசாலா – அரை

தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

பட்டை வகைகள் – சிறிதளவு

எண்ணெய், நெய் – தேவைக்கேற்ப

புதினா – அரை கப்

தயிர் – அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

இதையும் படியுங்கள்:
அருமையான சுவையில் கத்திரிக்காய் பூண்டு மசாலா செய்வது எப்படி?
Delicious Pulao Recipes

செய்முறை:

குக்கரில், எண்ணெய் மற்றும் நெய்விட்டு, சூடானதும், பட்டை வகைகளை தாளிக்கவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அவை நன்கு வதங்கியவுடன், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் புதினா இலைகள் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும், மசாலா தூள்கள் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அதன்பின்னர், ஸ்வீட் கார்ன் சேர்த்து லேசாக வதக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து வதக்கவும். பின்னர், ஊறவைத்து களைந்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்துகிளறி, உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும். பின்னர், 1 கப் அரிசிக்கு ஒன்றரைகப் தண்ணீர் சேர்த்துகிளறி குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில்விட்டு இறக்கிவிடவும். ஸ்வீட் கார்ன் புலாவ் தயார்.

                    *******

ஜவ்வரிசி புலாவ் 

தேவை:

ஜவ்வரிசி - ஒரு கப், 

தக்காளி - 1, 

தேங்காய்த் துருவல் _ அரை கப், 

சீரகம் - சிறிதளவு, 

பெரிய வெங்காயம் - 1,

 பீன்ஸ்-கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், 

இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு, 

மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 

கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்றாக, கெட்டியாக அரைக்கவும். அதை வடிகட்டி, அந்த சாறில் ஜவ்வரிசியை 20 நிமிடம் ஊறவிடவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி, தேவையான உப்பு, மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து நன்றாக வதங்கியதும், ஊறிய ஜவ்வரிசியை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி, நறுக்கிய மல்லித்தழையைத் தூவி இறக்கவும். இதை சூடாக சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும். 

               ********

சேனைக்கிழங்கு புலாவ்

தேவை:

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - 2

பூண்டு - 2 பல்

இஞ்சி - 1 துண்டு

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - 1 கைப்பிடி

புதினா - 1 கைப்பிடி

பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்

சோயா சங்க்ஸ் - 50 கிராம்

எண்ணெய், உப்பு - தேவைக்கு

கிராம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1

முந்திரி - 10

இதையும் படியுங்கள்:
விநாயகர் சதுர்த்தி சிறப்பு: கொழுக்கட்டையின் புதுமையான வகைகள்!
Delicious Pulao Recipes

செய்முறை: 

முதலில் சோயா சங்ஸ்ஸை சுடு தண்ணீரில் ஊறவைத்துப் பிழிந்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து லேசாக வதக்கவும்

பிறகு அரிசி கழுவிப்போட்டு வதக்கவும். சோயாவை சேர்க்கவும்.

1க்கு 2 தண்ணீர்விட்டு குக்கரில் வேகவிடவும். பிறகு முந்திரி வறுத்து சேர்த்துப் பரிமாறவும். சுவையான சேனைக்கிழங்கு புலாவ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com