புதுசு கண்ணா புதுசு! நாவிற்கு விருந்தளிக்கும் கமகமக்கும் பலாக்காய் பிரியாணி!

jackfruit-biryani
jackfruit-biryani
Updated on

நாம் அன்றாட வாழ்வில் பிரியாணி சாப்பிட்டு இருப்போம். காய்கறிகள், அசைவம் மற்றும் காளான் கொண்டுதான் பிரியாணி செய்து இருப்போம் . இப்போது புதுவிதமாகப் பலாக்காய் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம். இந்த பலாக்காய் பிரியாணி ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 1/2 கிலோ

அரிசி - 1 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு

அரை கப் - தயிர்

உப்பு - தேவையான அளவு

புதினா , மல்லிச் செடி - தேவையான அளவு

பட்டை , சோம்பு, கிராம்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 150 கிராம்

பச்சை மிளகாய் - நான்கு

பிரியாணி மசாலா - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவையில் கருப்பு கவுனி அரிசி அல்வா மற்றும் சத்தான பாதாம் திணை கேசரி!
jackfruit-biryani

செய்முறை;

பலாக்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும். அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு குக்கரில் ரெண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு, கிராம்பு இவற்றை நன்கு வதக்கவேண்டும்.

அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கிய பின் அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு மல்லித்தழை, புதினா, தயிர் சேர்த்து கொள்ளவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிரியாணி மசால் சேர்த்துகொள்ள வேண்டும். நீர் தேவையான அளவு ஊற்றி கொதித்த பின் அரிசி மற்றும் பலாக்காய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின் குக்கரில் மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரில் பிரஸர் அடங்கிய பின் பிரியாணியை நன்கு கிளறி விடவும். இப்போது சுவை மிகுந்த கமகமக்கும் பலாக்காய் பிரியாணி ரெடி. வீட்டில் இருப்பவர்களுக்கு பரிமாறினால் பலாக்காய் பிரியாணி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

logo
Kalki Online
kalkionline.com